மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 299 ரூபாயிலிருந்து 294 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுப்பர் டீசலின் விலை, 313 ரூபாயிலிருந்து 318 ரூபாவாக அதிகரித்துள்ளது.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
இன்று(31 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த திருத்தங்கள் அறிவிக்கப்படலாம்.
இதேவேளை, கடந்த மாத விலை திருத்தத்தின்படி ஒட்டோ டீசல் 6 ரூபாவாலும் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 6 ரூபாவாலும் மண்ணெண்ணய் விலை 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டிருந்தது.
எனினும், கடந்த மாத விலைத் திருத்தத்தின் படி ஏனைய எரிபொருள் விலைகள் எதிலும் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.





