பெரிய வெங்காய கொள்வனவு சர்ச்சை!

அரசாங்கம் பெரிய வெங்காயம் போன்ற விளைபொருட்களைக் கொள்வனவு செய்யும் போது குறிப்பிட்ட தரங்களைப் பேண வேண்டியது அவசியம் எனத் விவசாய அமைச்சர் லால் காந்தா தெரிவித்துள்ளார்.

பெரிய வெங்காயத்தைக் கொள்வனவு செய்வதற்காக, அரசாங்கம் பல அளவுகோல்களை அறிமுகப்படுத்தியதனால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, நேற்றையதினம் ( 29) அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சதொச நிறுவனம் கொள்வனவு செய்யும் வெங்காயக் கையிருப்பு பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிற விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டியுள்ளது.

இதனால் அதன் தரத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

இருப்பினும், வெங்காயத்தின் விட்டம் 35 மி.மீ. முதல் 65 மி.மீ. வரை இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அரசாங்கத்தின் இந்த புதிய கொள்முதல் அளவுகோல்களை விவசாய அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரும் விமர்சித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்