கரூரில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் மரணம் அடைந்தனர். அந்த சம்பவம் பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.
விஜய் தரப்பை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து இருந்த நிலையில், நீதிபதியை சில விஜய் ரசிகர்கள் தாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் அவர்கள் மீதும் தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகர் விஜய் 20 லட்சம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்து இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் கரூரில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்து உள்ளார்.
கரூருக்கு நேரில் சென்று கமல் இந்த நிதியை குடும்பத்தினரிடம் வழங்கி இருக்கிறார்.
Post Views: 114





