எதிர்வரும் ரமழான் நோன்பை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழத்துக்கான வரியை குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம் பழம் ஒரு கிலாே கிராமுக்காக தற்போது நடைமுறையில் இருக்கும் 200 ரூபா விசேட சந்தைப்பொருள் வரியில் ஒரு கிலாே கிராமுக்கு ஒரு ரூபாய் மாத்திரம் அறவிடும் வகையில் குறித்த வரி 199 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வினால் 2022 மார்ச் மாதம் 28ஆம் திகதி ஆகிய நேற்றைய தினம் முதல் அமுலுக்கு வரும்வகையில் 2007 8 ஆம் இலக்கத்தினுடைய விசேட சந்தைப்பொருளின் வரி சட்டத்துன் கீழ் 2022 மார்ச் மாதம் 28ஆம் திகதிய 2275/01 அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
அதேபோன்று இறக்குமதி அனுமதி பத்திர முறைமையின் கீழ் பேரீச்சம் பழம் இறக்குமதி செய்ய தடை செய்திருப்பதாக தெரிவிக்கப்படும் பிரசாரம் பொய்யான தகவல் என்பதுடன் இதனூடாக மக்களை பிழையாக வழிநடத்த முன்பட்டிருப்பது உறுதியாகி இருப்பதாகவும் நிதி அமைச்சு தெரிவித்திருக்கின்றது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com