கால்நடைகளைக் கடத்திச் சென்ற குற்றச் சாட்டில் 7 பேர் கைது!

முல்லைத்தீவிலிருந்து 2 லொறிகளில் கால்நடைகளை கடத்திச்சென்ற 7 பேரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் நெல் கொண்டுசெல்வதாகக் கூறி முல்லைத்தீவிலிருந்து பேருவளை மற்றும் கல்முனைக்கு கால்நடைகளை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலைகளுக்கு நெல் கொண்டுசெல்லும் போர்வையில் தொடர்ச்சியாக அவர்கள் கால்நடைகளை கடத்திச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் […]