கட்சிக்கு எதிராக வழக்கு போட்டவருக்கு சார்பாக வாதாடிய சுமந்திரன்: நீதிமன்றில் உண்மை அம்பலம்!

நேற்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பான வழக்கு இணக்கப்பாட்டின் சந்தர்ப்பங்களை ஆராய எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தெரிவுகள் அனைத்தையும் 326 பொதுச்சபை உறுப்பினர்களுடன் மீள நடாத்த தயார் என்று பகிரங்கமாக சிறீதரன் தரப்பு தெரிவித்திருந்த நிலையில், சுமந்திரன் தரப்பும் ஏற்கனவே எழுத்துமூலம் இதே நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்கள். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற தலைவர் தெரிவில் சிறீதரனிடம் 50 வாக்குகள் வித்தியாசத்தில் சுமந்திரன் தோற்ற பின் சிறீதரனை பதவியேற்கவிடாமல் தடுக்கும் […]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன்!

சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசின் நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக சென்னை புறப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை எப்படியாவது தடுத்து நிறுத்த கடுமையாக முயற்சி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இடம்பெறவுள்ள அயலக தமிழர் தின விழாவின் சிறப்பு விருந்தினராக சிவஞானம் சிறீதரன கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில், குற்றபுலனாய்வு மூலம் சிறீதரன் மீது குற்றவியல் வழக்கு குற்றச்சாட்டு இருக்கிறது என போலி முறைப்பாடு ஒன்றை செய்து. குடிவரவு குடியகல்வு […]
நாடாளுமன்ற தேர்தல்; வாக்கு எண்ணும் முறை பற்றிய தெளிவூட்டல்!

எதிர்வரும் நவம்பர் 14 வியாழன் அன்று நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணுவதற்கான செயல்முறையினை தேர்தல்கள் ஆணைக்குழு அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் தெளிவுபடுத்திய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் நவம்பர் 14 ஆம் திகதி மாலை 04.15 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவித்தார். வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையத்துக்கு வருவதை அடிப்படையாகக் கொண்டு, வழக்கமான வாக்கு எண்ணும் பணிகள் அன்றைய […]
வடக்கு ஆளுநரைச் சந்தித்த எரிக்சொல்ஹெய்ம்!

அரசதலைவர் ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே அயலுறவுத்துறை அமைச்சருமான எரிக்சொல்ஹெய்ம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை(30) மாலை சந்திப்புக் கலந்துரையாடல் ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை, மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றம், எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள், சுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.