நாடு முழுவதிலும் அரிசிக்கு தட்டுப்பாடு விலை அதிகரிப்பு!

சந்தையில் தற்போது அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவிவருவதன் காரணமாக அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசிக்கான விலையை அதிகரித்துள்ளமையினால் சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்களும் விலையை அதிகரித்துள்ளனர். இதன்படி, சந்தையில் கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் அரிசி 210 ரூபாய் முதல் 230 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். எனினும், ஒரு கிலோகிராம் நாடு அரிசி […]

அடுத்த இரண்டு பெரும்போக நெல் பயிர்ச்செய்கைக்கு உரம் இலவசம்.

ஜூலை 01ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராம வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய வாரமொன்று அறிவிக்கப்படவுள்ளதாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நெற் பயிச்செய்கைக்குத் தேவையான MOP உரத்தை அடுத்த இரண்டு பெரும் போகங்களுக்கு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் […]