வரலாற்று சிறப்புமிக்க நல்லூரானுக்கு கொடிச்சீலை கையளிக்கப்பட்டது, நாளை மகோற்சவம் ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்துக்காக சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து […]
யாழ் நல்லூர் கந்தன் திருவிழாவிற்கு மணல் கொடுக்க மக்கள் எதிர்ப்பு!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக வருடந்தோறும் குறிப்பிட்ட மணல் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இருந்து பிரதேச மக்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மணல் வழங்க பிரதேச மக்கள் எதிர்பு தெரிவித்த நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு மணல் விநியோகம் இடம்பெறுகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஜூலை 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ஒவ்வொருவருடமும் நல்லூர் கந்தனுக்கு அம்பன் பகுதியில் […]
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சபாநாயகர் விஜயம்!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். குறித்த வழிபாட்டு நிகழ்வு நேற்றையதினம்(18) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள சபாநாயகர் பல்வேறு இடங்களிற்கும் செல்லவுள்ளார். இதனொரு அங்கமாகவே நேற்று மாலை நல்லூர் கந்தசுவாமி கோவிலில் விசேட வழிபாடுகளில் அவர் ஈடுபட்டார்.
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பாக விசேட அறிவிப்பு!

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகளையும் எதிர்வரும் 30.07.2025 ஆம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர் பதிவுசெய்யவேண்டும் என பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும் வீடுகளை நாளாந்த, வாரந்த, மாதாந்த அடிப்படையில் வாடகைக்கு வழங்குபவர்கள் அனைவரும் இதற்குள் உள்வாங்கப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார். இதற்கான விண்ணப்பப்படிவங்களை நல்லூர் பிரதேச சபையின் தலைமைக் காரியாலயம், கொக்குவில் உப […]
நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவம் – யாழ். மாநகர சபையினருக்கு பெருவிழா பட்டோலை கையளிப்பு

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் (27) பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி ஆலய கணக்குபிள்ளையால் கையளிக்கப்பட்டது. […]
நல்லூர் வளாகத்தில் அசைவ உணவக பெயர் பலகையை அகற்றிய மாநகர சபை!

நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்திற்கான அனுமதிகளை பெறுமாறு மாநகர சபை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், அனுமதி இன்றி உணவகத்திற்கு முன்பாக வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் நேற்றைய தினம் வியாழக்கிழமை அகற்றப்பட்டுள்ளது. அதேவேளை , குறித்த உணவகத்தில் சில சுகாதார குறைபாடுகள் […]
வெள்ளத்தில் மூழ்கிய நல்லூர்!

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நல்லூர் ஆலய பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.