சீன ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி இடையே சந்திப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. மேலும் 07 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்த இருதரப்பு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதனையடுத்து சீனாவில் இடம்பெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு […]

மோடிக்கு இத்தாலிய பிரதமர் வாழ்த்து!

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்துகளை இத்தாலியப் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அதன்படி இந்தியா – இத்தாலி நாடுகளுக்கு இடையேயான நட்பை வலுப்படுத்தும் விதமாக இருநாடுகளும் இணைந்து செயல்படும் என்றும், எம் மக்களின் நலனுக்கான பல்வேறு விஷயங்களிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவோம் எனவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.