வடக்கு ஆளுநரைச் சந்தித்த எரிக்சொல்ஹெய்ம்!

அரசதலைவர் ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே அயலுறவுத்துறை அமைச்சருமான எரிக்சொல்ஹெய்ம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை(30) மாலை சந்திப்புக் கலந்துரையாடல் ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை, மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றம், எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள், சுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.