கள்ளக்குறிச்சி வைத்தியசாலைக்கு சென்ற நடிகர் விஜய்.

கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளதோடு 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிப்மர் மருத்துவமனையில் மாத்திரம் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. ஏற்கனவே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தே.மு.தி.க […]