வீடற்றவர்களுக்கு அரசின் மகிழ்ச்சித் தகவல்!

அநுர அரசு கொழும்பில் (olombo) 780 கோடி ரூபாய் செலவில் 730 புதிய வீடுகள் கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதி 2026 முதல் 2028 ஆம் ஆண்டு வரை ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவைப் பத்திரத்தை வீட்டுவசதி அமைச்சர் அனுர கருணாதிலக்க சமர்ப்பித்த நிலையில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கொழும்பு மாவத்தை மற்றும் டொரிங்டன் மாவத்தையில் 2 வீட்டுத் திட்டங்களின் கட்டுமானம் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், அவற்றை […]
சீனாவால் அன்பளிப்புச் செய்யப்பட்ட வீடு ஒன்று பருத்தித்துறையில் அமைக்கப்பட்டுள்ளது.

சீன அரசால் வடக்கு மாகாண மீனவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருத்து வீடுகளில் ஒன்றே தற்போது பருத்தித்துறையில் அமைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் மீன்பிடித் திணைக்களத்தின் ஆளுகையில் உள்ள துறைமுகப் பகுதியில் இந்தப் பொருத்து வீடு அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கான பொருத்து வீடுகள் தற்போது நாவற்குழிப் பகுதியில் உள்ள யாழ். மாவட்ட செயலக களஞ்சியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த வீட்டு மாதிரியை மீனவர்கள் பார்வையிடுவதற்காகவே பருத்தித்துறையில் ஒரு வீடு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.