நாட்டில் முட்டை விலை தொடர்பில் உற்பத்தியாளர்கள் சங்கம் அதிருப்தி!

தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கமைய முட்டைகளை விற்பனை செய்வது சாத்தியமில்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று(11) முதல் முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. இதன்படி, வெள்ளை முட்டை 18 ரூபாவுக்கும், சிவப்பு முட்டை 20 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக அறிவித்திருந்தது. எனினும், இவ்வாறான விலைக்கு முட்டையை விற்பனை செய்வதன் மூலம் தமக்கு நட்டம் ஏற்படக்கூடும் என, அகில இலங்கை […]

முட்டை விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக வெளியான தகவல்!

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை நிறுத்தும் நோக்கில் முட்டைகளின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயத்தினை அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டார குறிப்பிட்டுள்ளார். அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 18 ரூபாயாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் […]

முட்டை விலை வேகமாக குறைந்து.

நாட்டின் சில பகுதிகளில் முட்டை விலை வேகமாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜா-எல, கந்தானை, ராகம உள்ளிட்ட பகுதிகளில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, முன்னர் 40 ரூபா தொடக்கம் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபா தொடக்கம் 30 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.