மின் கட்டண திருத்தம் குறித்த இறுதி தீர்மானம்!

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் பொது மக்களிடம் கருத்து கோரல் இடம்பெற்று வருவதாகவும் கட்டண திருத்தம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (8) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “மின் கட்டணத்தை குறைப்பதை இலக்காகக் கொண்டே இலங்கை […]

நாட்டில் மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில், 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்துள்ளது. தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டங்கள் மற்றும் மறுசீரமைப்பு செயல்முறைகளுக்கு மத்தியில் சபை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதன்படி, மின்சார கட்டணத்தை 6.8சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சாரசபை முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (Public Utilities Commission of Sri Lanka (PUCSL) தெரிவித்துள்ளது. அத்துடன், தொடர்பான […]

2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மின்சார கட்டண திருத்தம்!

2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மின்சார கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவை, இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ளது. இதனையடுத்து, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம், முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்த கருத்துக்களை பெற்றுக்கொள்ள மாகாண மட்டத்தில் பொது ஆலோசனைகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, 9 மாகாணங்களிலும் 2025 மே 23 முதல் ஜூன் 3 ஆம் திகதி வரை பொதுமக்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைய பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்தோரின் ஆலோசனைகள் 2025 ஜூன் 5ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. […]