சன நெரிசல் அதிகமான பகுதியில் திரைப்பட பாணியில் துரத்தி துரத்தி வாள்வெட்டு!

கந்தளாய் பகுதியில், இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று பகல் சன நெரிசல் அதிகம் காணப்படும் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையே இவ்வாறு கூரிய ஆயுத தாக்குதலாக மாறியுள்ளது. சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான நபரின் தாயார் கருத்து தெரிவிக்கையில், ”எனது மகனுக்கும், குறித்த நபருக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தாக்குதலானது இடம்பெற்றுள்ளது. தனது […]