இந்தியாவின் இந்தூரில் அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் இருவர் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை!

இந்தியாவின் இந்தூரில் அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் இருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா வெளியிட்ட கருத்துகள் ‘பாதிக்கப்பட்ட தரப்பை குறை கூறுவதாக தெரிவித்து பெரும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை சிற்றுண்டிச் சாலையொன்றுக்கு சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸ் கைது செய்தது. இந்த சம்பவத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை “வருந்தத்தக்கது” […]

ஆப்கானுடனான ஒருநாள் தொடருக்கான பங்களாதேஷ் அணி அறிவிப்பு!

இந்த மாதம் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியை பங்களாதேஷ் அறிவித்துள்ளது. ஒக்டோபர் 8 ஆம் திகதி அபுதாபியில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஆரம்பமாகவுள்ளது. 2027 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் ஒரு முக்கியமான ஆயத்தமாக இருக்கும். அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர் லிட்டன் தாஸ் காயம் காரணமாக மீண்டு வருவதால் இந்த அணியில் இடம்பெறவில்லை. அதே நேரத்தில் […]

ஆசிய கிண்ண தொடர், மைதானத்துக்கு வர மறுக்கும் பாகிஸ்தான் அணி!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று(17.09.2025) ஐக்கிய அரபு இராச்சிய அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்ள உள்ளது. போட்டி ஆரம்பிக்க சிறிது நேரமே உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி, இன்னும் மைதானத்துக்கு வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கெதிரான கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றது. அப்போது, இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்து விட்டனர். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்திய அணி இவ்வாறு நடந்துகொண்டதாக […]

கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா!

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இன்று (04) அறிவித்தார். மிஸ்ரா, இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சர்வதேச அரங்கில் அறிமுகமான இவர், அந்தப் போட்டியில் ஐந்து ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். 2008 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் […]

இன்று இலங்கை,சிம்பாப்வே இரண்டாவது ஒருநாள் போட்டி !

சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (31) நடைபெறவுள்ளது. ஹராரே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. அதன்படி, இந்த ஒருநாள் தொடரில் தற்போது இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. […]

பல வருடங்களின் பின்னர் நனவாகியது உலகக் கோப்பை கனவு, செம்பியனை வீழ்த்திய தென்னாபிரிக்கா!

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று தென்னாபிரிக்கா அணி புதிய வரலாறு படைத்துள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதலில் 212 ஓட்டங்களும், தென்னாப்பிரிக்க அணி 138 212 ஓட்டங்களும் எடுத்தன. அதன் பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி அணி 207 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு 282 ஓட்டங்கள் என்ற வெற்றி […]