வடக்கில் இருந்து 40 இலட்சம் பெறுமதியான ஆடுகள், மாடுகள் மீட்பு!
வடக்கில் இருந்து புத்தளம் மற்றும் கொழும்பு நோக்கி இரு வாகனங்களில் கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் ஓமந்தைப் பகுதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அவை 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டதுடன், ஆடுகளும், மாடுகளும் மீட்கப்பட்டுள்ளன. அவற்றைக் கடத்தினர், என்ற சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.