கொழும்பு கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு, மேலும் இருவர் கொழும்பில் கைது!

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டிற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்றையதினம் குறித்த (13) கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இந்தக் குற்றத்தைச் செய்ய துப்பாக்கிதாரி வந்த காரின் சாரதியாக இருந்தவர் என்றும், சந்தேகநபரான பெண், இந்தக் குற்றத்தைச் செய்ய சந்தேகநபர்களுக்குத் தங்குமிட வசதிகளை வழங்கியவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபருக்கு 27 வயது எனவும், […]
கொழும்பு பேலியாகொடை தொடர்மாடி குடியிருப்பில் செயல்படும் போதைப்பொருள் வலையமைப்பு!

பேலியாகொடை தொடர்மாடி குடியிருப்பில் போதை பொருள் விற்பனை மிகவும் பயங்கரமான முறையில் நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேலியாகொடை புதிய பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் மிக நீண்ட காலமாக குறித்த போதை விநியோகம் நடைபெற்றுவருவதையும் அப்பகுதியை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் தமது பாதுகாப்புக்காக உளவாளிகளை ஈடுபடுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது. அங்கு போதைப் பொருள் வியாபாரம் நடைபெறும் நேரத்தில் வெளியாட்கள் எவரும் உள்ளே செல்ல முடியாதவாறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த தொடர்மாடி குடியிருப்பில் முதலாம் மாடியில் […]
கொழும்பில் பரபரப்பு, மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு!

மாளிகாவத்தையின் ஜும்மா மஸ்ஜித் சாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று(03.09.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் T-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
வடக்கு ,கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்தமாறு கோரி கொழும்பில் நாளை மாபெரும் போராட்டம்!

வடக்கு – கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்தமாறு கோரி கொழும்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து நாளை(22) காலை 9 மணியளவில் நாடாளுமன்றச் சுற்று வட்டத்தில் குறித்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். குமணனை அச்சுறுத்துவதை நிறுத்து, வடக்கு – கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான க.குமணனைப் […]
தற்போது செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர். நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினர் பலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இதற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
உறங்காத கொழும்பு’ அரசாங்கத்தின் புதிய திட்டம்

இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்கக்கூடிய உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான அணுகலுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, ‘கடலோர இரவுப் பொழுது : உறங்காத கொழும்பு’ (Marine Nights: Awakening Colombo) தொனிப்பொருளின் கீழ் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து தெஹிவல வரைக்குமான 7.4 கிலோமீற்றர் தூரம் கொண்ட கொழும்பு கடலோர வீதியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் காலி […]
கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இம்முறையும் 16 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இந் நிலையில், இன்று (18) காலை கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.