கல்லூரி மாணவி சகோதரனுடன் பலியான சோகம்!
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் மழை பெய்து வந்தாலும் தண்ணீர் பிரச்சனை இன்னும் தீராமலேயே இருந்து வருகிறது. பெங்களூர் நகர் முழுவதும் பல பகுதிகளுக்கு இன்னமும் தண்ணீர் லாரிகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த அக்கா, தம்பி மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே தொட்டா நாகமங்கலாவைச் சேர்ந்தவர் மதுமிதா(20). […]