நாட்டில் தேங்காய் விலை தொடர்பில் வெளியான தகவல்!

நாட்டில் வாராந்திர ஏலத்தில் சராசரி தேங்காய் விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாக 5 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயம் தெங்கு அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆயிரம் தேங்காய்களின் சராசரி விலை 128,060 ரூபாயாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், வாராந்த தேங்காய் ஏல விற்பனையில், பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச விலை குறிப்பிடப்படவில்லை. அத்துடன் 250 கிலோ கொப்பரை 115,000 முதல் 132,500 ரூபாய் வரை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான பின்னணியில், […]

வடக்கில் தேங்காய் உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்!

‘கப்துரு சவிய’ என்ற வடக்கின் தெங்கு செய்கை வேலைத்திட்டம் புதுக்குடியிருப்பு நகரில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. குறித்த விடயத்தை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். வடக்கில் ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அந்தவகையில், 2025 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 16000 ஏக்கரில் தெங்கு செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 2027ல் குறித்த அளவை 50000 ஏக்கராக […]

நாட்டில் தேங்காய் விலை திடீர் அதிகரிப்பு!

நாட்டில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அதன்படி, சாதாரண அளவிலான தேங்காய் ஒன்றின் சில்லறை விலையில் 185 முதல் 205 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் சிறிய தேங்காய் ஒன்று 160 முதல் 190 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை கண்டியில் உள்ள தலதா மாளிகையில் நடைபெறும் எசல பெரஹெராவிற்கு தேவையான கொப்பரையை வாங்குவதில் அதிக செலவு ஏற்பட்டுள்ளதாக தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார். எசல பெரஹெராவிற்கு இருபது […]

தேங்காய் மற்றும் தேயிலை ஏற்றுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!

இந்த ஆண்டின் (2025) முதல் ஐந்து மாதங்களில் தேயிலை மற்றும் தேங்காய் ஏற்றுமதி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. குறித்த விடயத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டின் (2024) முதல் ஐந்து மாதங்களில் 565.3 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த தேயிலை ஏற்றுமதி வருவாய், இந்த ஆண்டின் (2025) முதல் ஐந்து மாதங்களில் 7.9 சதவீதம் அதிகரித்து 610.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. மேலும், தேங்காய் ஏற்றுமதி வருவாய் கடந்த […]

நாட்டில் மீண்டும் தேங்காய் விலை உயர்வடைய சாத்தியம்!

நாட்டில் மீண்டும் தேங்காய் விலை உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விலங்குகளால் தேங்காய் அறுவடை சேதமடைந்ததால், சந்தையில் தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தேங்காய் உற்பத்தி பொருக்களின் விலையும் அதிகரித்தன. கடந்த சில மாதங்களாக 220 ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய் சில தினங்களுக்கு முன்னர் சந்தையில் ​​100 முதல் 170 ரூபா வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. சில வியாபாரிகள் அதிக இலாபத்துடன் தேங்காய்களை விற்பனை செய்வதாகவும், அப்போது தேங்காய் விற்பனை குறைந்ததால் […]

தேங்காய் விலை வீழ்ச்சி!

உள்நாட்டுச் சந்தையில் தேங்காயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் ஒன்று, தற்போது 100 ரூபாய் முதல் 170 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விற்பனை அதிகரித்துள்ளதாகவும் விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் எதிர்வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் வீழ்ச்சியடையக் கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேநேரம் தற்போது, சந்தையில் தேவைக்கு மேலதிகமாக தேங்காய் இருப்பு அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேங்காய் விலை தொடர்பில் மகிழ்ச்சி தகவல்!

கடந்த சில மாதங்களாக ரூ.200க்கு மேல் இருந்த தேங்காயின் மொத்த விலை தற்போது ரூ.120க்கும் குறைவாக குறைந்துள்ளதாக தேங்காய் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக தேங்காயின் மொத்த விலை ரூ.200க்கு மேல் இருந்ததாகவும்,அண்மைக் காலம் வரை ரூ.180க்கு அருகில் இருந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், கடந்த வாரம், தேங்காயின் மொத்த விலை திடீரென ரூ.135 முதல் 130 வரை குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனுடன், புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஒரு தேங்காயின் மொத்த விலை […]