தீவிரமடையும் புலனாய்வு விசாரணை, யாழ் ஆனந்தனால் கடத்தபட்டவர்களின் பட்டியல்!

தற்போது கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்பில் வெளியாகும் விசாரணை அறிக்கைகள் மற்றும், அவருக்கு உதவிய தரப்பின் விபரங்கள் தென்னிலங்கைக்குள் மட்டுப்படாது தமிழர் பகுதிகளிலும் தீவிர விசாரணைக்குளாகியுள்ளன. இலங்கை மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களில் பேசப்படும் விடயமாக மாறியுள்ள இஷாரா, அவருடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் கும்பல் உள்ளிட்ட விடயங்களிலான விசாரணையில் இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச பிரிவுகளும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இஷாராவை இலங்கையில் இருந்து நாடுகடத்த உதவியதாக கருதப்படும் யாழ். ஆனந்தன் தொடர்பில் வெளியாகும் விடயங்கள் […]

இலங்கையில் ஐஸை விடவும் ஆபத்தான போதைப் பொருள் தயாரிப்பு!

ஐஸ் எனப்படும் மெதபெடமைன் என்ற போதைப் பொருளை விடவும் ஆபத்தான புதிய போதைப் பொருள் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வெலிகம பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் மீட்கப்பட்ட போதைப் பொருள் மாதிரிகளை சோதனையிட்ட போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. வெலிகம பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு செயல்பட்டிருந்த போதைப்பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர். அங்கு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களும் உபகரணங்களும் […]

கம்மன்பிலவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணிலின் நிலை, கைதில் இருந்து விடுபட தீவிர முயற்சி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) நடந்தது போல எனக்கும் நடக்கலாம் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நேற்று(18.09.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு அறிவித்த படி நாட்டுக்கு வரும் போது கைது செய்வதற்கான சாத்தியம் இல்லை என்றே கூறியுள்ளனர். காவல்துறையிடம் வாக்குமூலம் […]

சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க (Saman Ekanayake) ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இருவரும் இரண்டு தனித்தனி முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அந்த திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பாக முன்னாள் காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் அளித்த வாக்குமூலம் தொடர்பில் கோட்டாபயவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் […]