சிறுவர்களுக்கு எதிரான கடுமையான குற்றங்கள்!

கடந்த மூன்று வருடங்களில் (2022 – 2023 -2024) சிறுவர்களை தவறான நடத்தைக்கு உட்படுத்தல், கொலை மற்றும் துஷ்பிரயோக சம்பவங்கள்,குற்றங்கள் எட்டாயிரத்து நானூற்று தொண்ணூற்று இரண்டு (8492) நடந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் தேசிய கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. குறித்த காலகட்டத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு நடவடிக்கைகள் தவறான நடத்தைகளின் எண்ணிக்கை 4309 ஆகும். கடந்த மூன்று ஆண்டுகளில் 54 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் […]

பெற்றோரை இழந்த, பாதுகாவலரை இழந்த வீதியோர சிறார்களுக்கு விசேட கொடுப்பனவு!

பெற்றோரை இழந்த, பாதுகாவலரை இழந்த, தாய் மற்றும் தந்தை இருவரும் அல்லது அவர்களில் ஒருவரையேனும் இழந்த அல்லது பாதுகாவலரின் பொறுப்பில் இருப்பினும், வாழ்கின்ற வீட்டில் தகுந்த பாதுகாப்பில்லாத பிள்ளைகளுக்கு அநாதைப் பிள்ளைகள் மற்றும் கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கு பராமரிப்பு இல்லங்கள்/சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் நிறுவனப் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டிறுதியில் அரச, தொண்டர் அமைப்புக்கள்மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் 356 நிலையங்களில் 9,191 பிள்ளைகள் வதிவிடப் பாதுகாப்புப் பெற்று வருவதாகப் பதிவாகியுள்ளது. நிறுவனப் பாதுகாப்பு மற்றும் […]