மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தல்!

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பான நிறுவனங்கள், செயலிகள் மற்றும் குழுக்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) பொதுமக்களுக்கான ஒரு முக்கியமான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட 1988ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் பிரிவு 83 (C) இன் கீழ், இந்த நிறுவனங்கள் அனைத்தும் சட்டவிரோதமான பிரமிட் திட்டங்களில் ஈடுபடுகின்றன என மத்திய வங்கி உறுதி செய்துள்ளது. புதிதாக உறுதி செய்யப்பட்ட “SGO/sgomine.com” உட்பட, 23 நிறுவனங்கள்/செயலிகள்/குழுக்கள் தடைசெய்யப்பட்ட திட்டங்களில் ஈடுபடுவதாக […]
வரலாறு காணாத மாற்றம் கண்ட பங்குச் சந்தை!

மூலதனச் சந்தையின் வரலாற்றில் முதல் முறையாக அனைத்து பங்கு விலைக் குறியீடும் (ASPI) 18,000 புள்ளிகளைத் தாண்டியதால், கொழும்பு பங்குச் சந்தை (CSE) இன்று (30) ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. இதற்கமைய இன்று(30) மதியம் 12:04 மணிக்கு இந்த மைல்கல்லைக் கடந்துள்ளது. இன்று காலை வர்த்தகத்தின் போது மொத்த பரிவர்த்தனை அளவு 129.23 புள்ளிகள் உயர்ந்து 18,001.97 ஆக பதிவாகியுள்ளது.