நாட்டில் சீமெந்து விலை அதிகரிப்பு!

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலை 100 ரூபாவால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், 50 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலை அதிகரிக்கப்பட்டாலும், சில்லறை விலை திருத்தப்படவில்லை என்று சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சீமெந்து உற்பத்தி செலவுகள் அதிகரித்ததே சீமெந்து விலை உயர்வுக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று முதல் 50 கிலோகிராம் சீமெந்து பையின் விலை குறைப்பு.

மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் சீமெந்து பையின் விலை 50 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து தொழிற்துறை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன் பிரகாரம், 50 கிலோகிராம் சீமெந்து பொதியின் புதிய அதி உயர் சில்லறை விலை 2400 ரூபாயாக அமைந்திருக்கும். இந்த விலைக் குறைப்புடன் நிர்மாணத் தொழிற்துறை ஊக்கம் பெறும் என தாம் எதிர்பார்ப்பதாக சீமெந்து தொழிற்துறை நிறுவனங்கள் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.