சகோதரர்கள் இருவரும் வண்டிக்குள் சிக்கிய நிலையில் பலி

இன்று (23) குளியாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குளியாப்பிட்டி ஹெட்டிபொல வீதியில் கம்புராபொல பாலத்திற்கு அருகில் புஜ்கமுவ ஓயாவில் இந்த ஜீப் வண்டி வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் குளியாப்பிட்டியவில் இருந்து ஹெட்டிபொல நோக்கிச் சென்ற ஜீப் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இடம்பெற்ற இடம் வளைவுகள் நிறைந்த பகுதி எனவும், தற்போதைய விசாரணைகளின் படி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி ஆற்றில் வீழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. […]