இலங்கை வங்கியின் ஊழியர்கள் எடுத்துள்ள தீர்மானம்,முடங்கப்போகும் வங்கிச் சேவைகள்!

இலங்கை வங்கியின் (BOC)அனைத்து கிளை வலையமைப்புகளையும் இன்று (29) மதியம் 12.30 மணிக்குப் பிறகு மூடிவிட்டு, வங்கிப் பரிவர்த்தனைகளிலிருந்து விலகுவதற்கு இலங்கை வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது. போனஸ் கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தங்கள் கோரிக்கைகள் முறையாக தீர்க்கப்படாவிட்டால், எதிர்வரும் 6 ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் குறித்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர் ஒருவர் கருத்து […]