யாழ்ப்பாணத்தில் மக்களே அவதானம்,நாவலர் வீதி பாபா ஆலயத்தில் நின்ற மோட்டார் சைக்கிளில் நூதன திருட்டு!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தரித்து நின்ற மோட்டார் சைக்கிளில் சூட்சுமமாக பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த திருட்டு சம்பவம் நேற்று (25.09.2025) யாழ்ப்பாணம் காவல் பிரிவிற்குட்பட்ட நாவலர் வீதியில் அமைந்துள்ள சாய்பாபா ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது. சாய்பாபா ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு வந்த யாழ். நல்லூர் பகுதியைச் சேர்ந்த பக்தரான யுவதியின் மோட்டார் சைக்கிளிலேயே இந்த சூட்சுமமான திருட்டு பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை CCTV காணொளியை வைத்து ஆரம்பித்திருந்தனர். குறித்த நபர் மாற்று […]

முல்லைத்தீவு வற்றாப்பளை ஆலய உற்சவத்திற்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

முல்லைத்தீவு, வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று திரும்பிய இளைஞன் ஒருவர் விபத்தில் பலியாகியுள்ளார். உந்துருளியில் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் விபத்துக்குள்ளாகிய இளைஞன் வாய்க்காலில் விழுந்து பலியாகியுள்ளார். செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை இடம் பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நித்திரை கலக்கம் காரணமாக இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர். பலியான இளைஞன் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது