அமெரிக்கா இலங்கைக்கு விதித்துள்ள அதிரடி தடை!

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திலும் ஊழல் இடம்பெறுவதாக அமெரிக்காவால் அறிக்கையொன்று வெளியாகியுள்ளது என்று பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 2025ஆம் ஆண்டிற்கான இலங்கை தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. குறித்த அறிக்கையில் கூறப்பட்ட விடயம் இலங்கைக்கு சாதகமானதாக இல்லை. இலங்கையில் தற்போதும் ஊழல் தொடர்வதால் முதலீடு செய்வதற்கு இலங்கை உகந்த நாடு அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இலங்கை மீது தடையொன்றையும் விதித்துள்ளனர் என குறிப்பிட்டார்.
நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான முரண்பாடுகள் காரணமாக அமெரிக்க அரசாங்கம் முடங்கியதாக அறிவிப்பு!

நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான முரண்பாடுகள் காரணமாக அமெரிக்க அரசாங்கம் முடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்வதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. குடியரசுக் கட்சி தற்போதைய நிதி திட்டத்தை ஏழு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், ஜனநாயகக் கட்சி சில சலுகைகள் வழங்கப்படாமல் இதை ஏற்க மறுக்கிறது. இதன் காரணமாக அமெரிக்க அரசாங்கம் முடக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு […]
அமெரிக்க H-1B விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்!

அடுத்த ஆண்டு பெப்பரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அமெரிக்க (America) வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் (Howard Lutnick) தெரிவித்துள்ளார். ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூபாய் 1.47 லட்சத்தில் இருந்து ரூபாய் 88 லட்சமாக (1 லட்சம் டாலா்) உயா்த்தும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அண்மையில் கையொப்பமிட்டாா். ஒருமுறை மட்டுமே செலுத்தக் கூடிய இந்த கட்டணம் 2026 […]
அமெரிக்காவின் முடிவால் செம்மணி அகழ்வில் பெரும் நெருக்கடி!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இலங்கையில் முறையான ஒரு ஆய்வுகூடம் ஒன்றை அமைப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் மக்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர். எனினும், ஐ.நாவிற்கு கிடைக்கப்பெறும் நிதியில் மிகப்பெரிய சரிவு தற்போது ஏற்பட்டுள்ளதால் ஆய்வுகூடம் அமைப்பது தொடர்பில் சிக்கல் நிலை ஏற்படலாம் என்று சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், செம்மணி போன்று அடையாளம் காணப்படும் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்படும் மனித எச்சங்கள், முறையான ஆய்வுக்குட்படுத்தி, தொடர்புடையவர்களிடம் கையளிக்கப்பட்டு […]
சர்வதேச விசாரணை, ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரங்கள்,அமெரிக்காவிலிருந்து ஒலித்த குரல்!

இலங்கையில் (Srilanka) காணாமல் போனவர்களுக்கான நீதி ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையையும் பொறுப்புக் கூறலையும் கோருகின்றது என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களை செம்மணியில் உள்ள புதைக்குழிகள் வேதனையுடன் நினைவூட்டுகின்றன. நாம் உண்மையில் இருந்து விலகிச் செல்ல முடியாது. காணாமல் போனவர்களுக்கான நீதி ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையும் பொறுப்புக்கூறலையும் கோருகிறது என […]