வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியது..

2024ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 13ஆம் திகதி நிலவரப்படி, குறித்த எண்ணிக்கை 300,162 ஆகும். கடந்த 10 வருட காலப்பகுதியில் 3 இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற இரண்டாவது தடவை இதுவாகும். இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டில் 310,948 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். 2024 ஆம் ஆண்டில், 177,804 ஆண் மற்றும் 122,358 பெண் தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். […]