நீங்கள் 4,13,22,31 ஆம் எண்ணில் பிறந்தவர்களா?

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் இயல்புகள் விசித்திரமானவை. இவர்களிடம் ரகசியம் எதையும் சொல்லாதிருப்பது நல்லது. ஏனெனில், அந்த ரகசியத்தை அப்படியே சம்பந்தப்பட்டவர்களிடம் கூடச் சொல்லிவிடுவார்கள். சுற்றித் திரிவதில் சுகம் காண்பவர்கள். சட்டையை மாற்றுவது போல் அடிக்கடி தொழில்களை மாற்றிக் கொண்டேயிருப்பர். அதேநேரம், எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் நிறுவனத் தலைவரே இவர்தானோ என்று நினைக்கும் அளவிற்கு ஈடுபாட்டுடன் உழைப்பர். விசேடமாக 4 , 13 ந் திகதியில் பிறந்தவர்கள் , இல்லாதவர்களுக்கு உதவுவதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். […]

நீங்கள் 5.14.23 ஆம் எண்ணில் பிறந்தவர்களா?

5.14.23 தேதிகளில் பிறந்தவர்கள் ஐந்தாம் எண்ணுக்கு உரியவர்கள். எதிலும் ஒரு வேகத்தை காட்டுவர். தங்களின் உத்வேக செயல்பாட்டிற்கு மற்றவர்கள் ஒத்து வரவில்லையானால் அவர்களை சோம்பேறி என்று வசைபாடவர். பஸ்சில் இருந்தாலும் சரி, விமானத்தில் பறந்தாலும் சரி… பக்கத்திலிருப்பவர் இவரது விசிட்டிங்கார்டை கேட்டுப் பெறுமளவிற்கு பழகிவிடுவர். மொத்தத்தில் பிடிவாதம் அதிகம் . ஒரே இடத்தில் இருக்கப் பிடிக்காத இவர்கள் வெளியூர் பயணத்தை அதிகம் விரும்புவர். இயற்கைச் சூழ்நிலைகள் மிகவும் ஈர்க்கும். இவர்களுக்குப் பிடித்தமான உணவு, உடை குணத்தை தெரிந்து […]

நீங்கள் 1,10,19,28 எண்ணில் பிறந்தவர்களா?

நீங்கள் 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய எண் 1. ஒன்றாம் எண் என்றாலே மிகவும் மகிழ்ச்சிதான். இந்த எண்ணுக்கு அதிபதி சூரியன். ஒன்றாம் 1,10,19,28 எண்ணில் பிறந்தவர்களின் இயல்புகளைத் தெரிந்துகொள்வோமா? பார்வையில் மிடுக்கு, தன்னம்பிக்கை, எதையும் சாதிக்கும் வல்லமை . பிறரை வேலை வாங்குவதில் திறமைசாலிகள் . கண்டுபிடிப்புத் திறமை, வான்வெளி ஆய்வுத் திறமை உள்ளவர்களாக இருப்பர் . இவர்கள் கல்வி, ஞானத்தில் திறமை இருந்தாலும் புகழுக்கு அடிபணிவர். தன்னம்பிக்கை உள்ளவர் . பொறாமை மிக்கவர்கள் […]

நீங்கள் 2,11,20,29 எண்ணில் பிறந்தவரா?

2,11,20,29 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 2 இன் அதிபதி சந்திரன். இவர்களின் இயல்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாமா? வீட்டைப் பூட்டிவிட்டு வெகுதூரம் சென்றபின் மீண்டும் வந்து பூட்டை இழுத்துப் பார்க்கும் அளவுக்கு சந்தேக குணமுடையவர்கள். மனம் போன போக்கிலே வாழ்ந்தால் என்ன என எண்ணக்கூடியவர்கள். இவர்களினால் பெற்றோர்களுக்கோ , உடன் பிறந்தவர்களுக்கோ ஒரு நன்மையையும் கிடைக்காது. இந்த எண்ணில் பிறந்தவர்கள் சுயநலமிக்கவர்களாகவும் , தன்னை பற்றி மட்டும் சிந்திப்பவர்களாக இருப்பர் . உலகம் உருண்டை […]

நீங்கள் 3,12,21,30 எண்ணில் பிறந்தவரா?

3,12,21,30 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 3 எண்காரர்களின் இயல்பு எப்படியிருக்கும் என்பது பற்றிக் காண்போம். தங்களுடைய சொல்லையே பிறர் கேட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் .பல இடங்களில் இவர்கள் சொல்வதே முடிவாக வர வேண்டும் என்று விரும்புவர் . இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு பொறாமை குணங்கள் இடைக்கிடை தலைதூக்கும் .மதி நுட்பத்தால் மாட்சிமை பெறும் இவர்களுக்கு உடல் உழைப்பு என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. இவர்களைப் போன்றே இவர்கள் உடம்பும் மிகவும் மென்மையானது. பல […]

நீங்கள் 6,15,24 ஆம் எண்ணில் பிறந்தவர்களா?

6,15,24 தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையின் இன்ப ரகசியங்களை இனிமையாக வாழ்வில் ரசித்து அனுபவிக்கும் இவர்கள் நல்ல பண்பும் தெய்வீகமும், தனித்துவமும், பிறரைக் கவர்வதிலும் வல்லவர்கள். கலைத்துறையில் மிகுந்த நாட்டமுடையவர்கள். சினிமா, தொலைக்காட்சித் துறைகளில் , இவர்களின் பங்கு பெரும்பான்மையானது. புதுப்புது வகைகளில் வடிவமைப்புச் செய்து ஆடை, ஆபரணத்துறையில் பெரும் பெயர் பெறுவர். எந்தக் காரியத்தை எடுத்தாலும் முடிக்காமல் விடமாட்டார்கள். இவர்களிடம் பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். நண்பர்களுக்கு மிக அதிகமாகவே செலவிடுவர். இயற்கையின் மேல் மிகுந்த நாட்டமுடைய […]

நீங்கள் 7,16,25 ஆம் எண்ணில் பிறந்தவர்களா?

7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் இறைபக்தியும் சர்வ ஞானமும் கல்வியும் நளினமும் நாவில் நல்வார்த்தைகளும் நற்செயலும் இமயம் போன்ற தெய்வீகத் தன்மையும் கூடவே குழப்பங்களுக்கு உட்படுத்திக்கொள்ளும் குணமும் கொண்டவர்கள் ஏழாம் எண்காரர்கள். யாரேனும் அறிவுரை சொன்னால் இக்காலத்தில் கேட்பதற்கு ஒருவருமில்லை. ஆனால், இவ்வெண்காரரிடம் ஆலோசனை கேட்டுப் பிரபலமாகலாம் என்பது இவ்வெண்காரர்களின் சிறப்பம்சம். மென்மையான குணமும் கொண்ட இவர்கள் தொட்டாற்சிணுங்கிபோல் அடிக்கடி நாணிக்கோணிக்கொள்வர். இவர்களுக்கு நண்பர்கள் மிகக் குறைவு. நேர்த்தியான ஆடை, அணிகலன்கள் மிகவும் பிடிக்கும். புகையிரத நிலையங்களுக்கு அருகில் […]