வவுனியாவில், குடும்பத் தகராறுகளின் காரணமாக தனது மனைவியை கொலை செய்த கணவன் ஒருவர், கழுத்தை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்துக் கொண்டு புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
கொல்லப்பட்டவர், 32 வயதான ரஜூட் சுவர்ணலதா என்பவர், அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கணவன்-மனைவிக்கிடையில் நீண்ட காலமாக குடும்பத் தகராறுகள் நிலவி வந்துள்ளன. இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி, கணவன் மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.

நயினாமடு காட்டுப்பகுதியில், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர், கழுத்தை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து மோட்டார் சைக்கிளில் புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளார். பொலிஸாருக்கு, தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.. மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.





