தனிநபர் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்த சாணக்கியன்.

1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கான தனிநபர் சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.

அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வழிமொழிந்தார்.

இந்த தனிநபர் சட்டமூலம் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி வர்த்தமானியினூடாக வெளியிடப்பட்டது.

தாமதமான மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள தடைகளை இந்தச் சட்டமூலம் நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்