இந்தியாவினால் டோனியர் விமானம் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட Dornier (INDO-228) உளவு விமானத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பெற்றுக்கொண்டார். இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் ஜனாதிபதியிடம் விமானம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்திய கடற்படையின் துணைத்தலைவர் வைஸ் அட்மிரல் சதீஷ் என் கோர்மடே உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தியாவுடனான ஒத்துழைப்பினால் ஏனைய துறைகளில் கிடைக்கப்பெற்ற பலன்களைப் போலவே, இலங்கை விமானப்படைக்கு டோனியர் பரிசளிக்கப்பட்டமையும் முக்கியமானதாக காணப்படுகிறது. “பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால் […]

எதிர்வரும் 4 நாட்களுக்கான மின்வெட்டு விபரம்!

நாட்டில் நாளைய தினம் முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், காலையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதேநேரம், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணி […]

மின் பிறப்பாக்கி வழமைக்கு திரும்ப 16 நாட்களாகும்!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பழுதடைந்துள்ள முதலாவது மின் பிறப்பாக்கியின் திருத்தப்பணிகள் நிறைவடைவதற்கு சுமார் 14 – 16 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்றைய மின்வெட்டு ஒரு மணித்தியாலம் இருபது நிமிடங்களுக்கு அமுல்படுத்தப்படும் எனவும், நாளை (16) முதல் மின்வெட்டை நீடிக்க வேண்டியுள்ளதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (15) காலை ஏற்பட்ட பழுதடைந்தமையினால், நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து தேசிய மின்விநியோகத்திற்கு முழுமையான […]

ஒரு ஏக்கர் வயல் காணியில் 180 புசல் அறுவடை செய்யக்கூடிய புதிய வகை நெல்

ஒரு ஏக்கர் வயல் காணியில் 180 புசல் நெல்லை அறுவடை செய்யக்கூடிய புதிய வகை நெல் இனம் அம்பலாந்தொட்ட அரச நெல் ஆய்வுப்பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அம்பலாந்தோட்டை நெல் ஆய்வு நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹர்ஷினி சிறிவர்தன இதுதொடர்பாக தெரிவிக்கையில், இது AT-378 என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது பச்சை அரிசி வகையைச் சேர்ந்ததாகும். மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடியது. ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம்,பொலன்னறுவை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களில் இந்த ரக நெல்லை உற்பத்தி செய்ய முடியும் என்றார் புலத்தையும் […]

விலங்குளுக்கான உணவு இறக்குமதிக்காக பெருந்தொகையான நிதி செலவிடப்படுகிறது

தற்போது ஒவ்வொரு மாதமும் விலங்குளுக்கான உணவு இறக்குமதிக்காக பெருந்தொகையான நிதி செலவிடப்படுவதாக அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. உள்ளுரில் கோழிப்பண்ணை மற்றும் விலங்களுக்கான உணவுகளை உற்பத்தி செய்யப்படும் பட்சத்தில் பெருந்தொகையான அந்நிய செலாவணியை மீதப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையினை மேலும் அதிகரிப்பதற்கு சிறந்த தரத்தை கொண்ட இறைச்சி வகைகள் மற்றும் முட்டைகள் தேவைப்படுகின்றன. இந்த நிலையை தவிர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என அகில […]

கோட்டாபய தங்கியிருந்த சிங்கப்பூர் விடுதிக்கான கட்டணம் 67 மில்லியன் ரூபா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை விடுதிக்கான கட்டணமாக செலுத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சேண்ட்ஸ் விடுதியில் தங்கியிருந்தனர். விடுதி தங்குமிட கட்டணமான 67 மில்லியன் ரூபாவை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவரான நிஸ்ஸங்க சேனாதிபதி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், தற்போது தாய்லாந்தில் உள்ள முன்னாள் […]

இன்று முதல் வழமையான முறையில் பாடசாலை

அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகளை இன்று முதல் வழமையான முறையில் முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, வாரத்தின் 5 நாட்களும் பாடசாலைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை பாடசாலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. போக்குவரத்து பிரச்சினை காணப்படும் பகுதிகளில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக பொருத்தமான போக்குவரத்து வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக சகல மாகாண அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இன்று ஆரம்பமாகும் பாடசாலை […]