கோட்டாபய இலங்கை வரும் திகதியை அறிவித்தார்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த உதயங்க வீரதுங்க அங்கிருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார். சிங்கப்பூரில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கடந்த 11ஆம் திகதி தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார். மனிதாபிமான அடிப்படையில் கோட்டாபய […]

தடை நீக்கப்பட்ட அமைப்புகளின் விபரங்கள்

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய 2022-08-01 திகதியிடப்பட்ட 2291/02 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் 04 (7) விதிமுறையின் கீழ் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புக்களின் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடைமுறைகள் தொடர்பான பின்னணி மற்றும் தெளிவுபடுத்தல். தடை நீக்கத்தின் சட்ட ஏற்பாடுகளும் பின்னணியும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் VII அத்தியாயத்தின் கீழ் செயல்படும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை 2001 செப்டம்பர் […]

இங்கிலாந்தின் பணவீக்கம் 40 ஆண்டுகளில் 10.1% ஆக உயர்ந்துள்ளது

40 ஆண்டுகளுக்கும் மேலாக விலைகள் அவற்றின் வேகமான விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, 1982 க்குப் பிறகு முதல் முறையாக UK பணவீக்கம் இரட்டை இலக்கங்களைக் கடந்துள்ளது. ஜூன் மாதத்தில் 9.4% ஆக இருந்த பணவீக்கம் ஜூலை வரையிலான 12 மாதங்களில் 10.1% ஆக உயர்ந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது. பாங்க் ஆஃப் இங்கிலாந்து பணவீக்கம் – விலைகள் உயரும் விகிதம் – 13% க்கும் அதிகமாக உச்சத்தை அடையலாம் என்று கூறியுள்ளது. […]

இலங்கையில் முச்சக்கர வண்டிகளை மின்சார மயமாக்கும் அமெரிக்கா!

அமெரிக்க அரசாங்கம், அதன் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகமான யுஎஸ்எய்ட் (USAID) ஊடாக, இலங்கையில் சமூக மற்றும் பொருளாதார நிலையான வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு சுத்தமான எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்த உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது. இந்த கூட்டாண்மையின் கீழ், இலங்கையின் மிகப்பெரிய வாகன நிறுவனமான டிபிஎம்சி, முச்சக்கர வண்டிகளை மின்சார […]

இலங்கையை அண்டிய கடற்பகுதியில் தீவிரமாக நோட்டமிடும் இந்திய

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவுக் கப்பல் நங்கூரமிட்டுள்ள நிலையில், பாக்கு நீரிணை பகுதியில் இந்திய கடற்படையினர் அதிநவீன கப்பல்கள் மற்றும் ரேடார்கள் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு, இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமை தொடர்பில், இந்திய அரசாங்கம் ஆட்சேபனை வெளியிட்டது. இதையடுத்து, கப்பலின் வருகையை பிற்போடுமாறு சீனாவிடம் இலங்கை கோரியது. இதன்காரணமாக, கடந்த 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய இருந்த கப்பலின் பயணம் […]

ஜாக்குலின் பெர்னாண்டஸ் 200 கோடி ரூபா பண மோசடி

பெண்ணொருவரை மிரட்டி ரூ.200 கோடி பணம் பறித்தமை தொடர்பில் தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கில் பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அமுலாக்கத்துறையினரால் டெல்லி நீதிமன்றில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஒருவரின் மனைவியை மிரட்டி சுகேஷ் சந்திரசேகர் மேற்படி பணத்தை பெற்றுள்ளதாகவும், அவற்றை பொலிவூட் நடிகைகளுக்காக செலவிட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், சுகேஷுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சில பரிசுப் பொருட்களைப் பெற்றது தெரியவந்தது. கைது […]

தாமரை கோபுரம் திறக்கப்படுகிறது!

சீன கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, தாமரை கோபுரத்தில் அலுவலக வசதிகள், காட்சியறைகள், மாநாட்டு அரங்குகள் மற்றும் பிரத்தியேகமான வர்த்தக நிலையங்களை பெற முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே அதில், சர்வதேச அளவிலான நிகழ்வுகள், […]