கண்டி, கதிர்காமம், அநுராதபுரம் உல்லாசப் பிரயாண ரயில் சேவை

கண்டி, கதிர்காமம், அநுராதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களை உள்ளடக்கிய அதி சொகுசு உல்லாசப் பிரயாண ரயில் சேவையை வார இறுதி நாட்களில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டத்திற்காக தனியார் துறை, இலங்கை போக்குவரத்து சபையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். சொகுசு ரயில்களில் பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டிச்சாலை, கழிவறை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக தனியார் துறையினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். விரைவில் கதிர்காமத்திற்கு பயணிக்கும் வகையில், கொழும்பிலிருந்து பெலியத்தை […]
இரண்டு வாரத்தில் 17,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் மாத்திரம் 17,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க குறிப்பிட்டார். பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்த வண்ணமுள்ளனர். நாளாந்தம் சுமார் 1600 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைவதாக தம்மிகா விஜேசிங்க தெரிவித்தார். […]
மன்னார், கிளிநொச்சி Adani குழுமத்திற்கு தற்காலிக அனுமதி

மன்னார் மற்றும் கிளிநொச்சியின் பூநகரியில் செயற்படுத்தப்படவுள்ள இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலைய செயற்றிட்டங்களுக்கு Adani Green Energy நிறுவனத்திற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 286 மெகாவாட் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் மன்னாரிலும் 234 மெகாவாட் மின்னுற்பத்தி நிலையம் பூநகரியிலும் அமைக்கப்படவுள்ளன. இந்த இரண்டு செயற்றிட்டங்களின் பெறுமதி 500 மில்லியன் அமெரிக்க டொலர் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக மின்சார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படாமையினால் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த 46 திட்டங்களில் 21 […]
விடுமுறையின்றி டிசம்பர் வரை பாடசாலை

டிசம்பர் மாத ஆரம்பம் வரையில் விடுமுறையின்றி வாராந்தம் 5 நாட்களும் பாடசாலையை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதனைக் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். தற்போது நாடு முழுவதும் வாராந்தம் ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடத்தப்படுகின்றன. பாடசாலைகளுக்கு போக்குவரத்து காரணங்களால் சமூகமளிக்க முடியாத நிலைமைகள் குறித்த முறைபாடுகள் எவையும் இதுவரையில் கிடைக்கவில்லை. அவ்வாறான நிலை ஏற்பட்டால் அது குறித்து போக்குவரத்து சபை உள்ளிட்ட தரப்புடன் கலந்துரையாடி அந்த பிரச்சினையைத் தீர்த்து, வாராந்தம் 5 நாட்களும் […]
2 மாதங்களின் பின்னர் சுப்பர் டீசல்

ஒரு லட்சம் மெற்றிக் டன் சுப்பர் டீசல் மற்றும் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சுப்பர் டீசல் கொண்டுவரப்படுகிறது. இதேவேளை, தேசிய எரிபொருள் அட்டை திட்டத்தின் கீழ், அரச வாகனங்களைப் பதிவு செய்வது குறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர தலைமையில் நடைபெற்றுள்ளது. இணையவழியில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர், மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பல்வேறு […]
லாஃப்ஸ் எரிவாயு இன்று சந்தைக்கு விநியோகம்

நாட்டிற்கு நேற்றைய தினம் வந்த கப்பலில் தரையிறக்கப்பட்ட எரிவாயு இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 3000 மெற்றிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தது. அந்த கப்பலிலிருந்த எரிவாயு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர், அதனை தரையிறக்கும் பணிகள் நேற்று மாலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 […]
முட்டை, கோழி இறைச்சி விற்பனையில் வீழ்ச்சி!

இலங்கையின் உள்ளூர் சந்தையில் முட்டை மற்றும் கோழி ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி ஆகியவற்றின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய விலங்கு பண்ணையாளர்கள் ஒன்றிய அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார். கால்நடை தீவனங்களின் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சந்தையில் வெள்ளை முட்டை ஒன்றின் விற்பனை விலை 63 ரூபாவுக்கும்இ சிவப்பு முட்டை 68 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோழித் தீவனம் மற்றும் […]