5 நாட்களும் வாகன வருமான வரி அனுமதி பத்திரத்தை விநியோகிக்க தீர்மானம்

வாரத்தின் ஐந்து நாட்களும் மேல்மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதி பத்திரத்தை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல்மாகாண பிரதான செயலாளர் சீ.ஜயந்தி விஜேதுங்க தெரிவித்துள்ளார். அதேநேரம், ஆகஸ்ட் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள மேல் மாகாண வாகனங்களின் வருமானவரி அனுமதி பத்திரங்களுக்கான அபராதம் அறவிடப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com […]
சோள செய்கையாளர்களுக்கு யூரியா

சோளம் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பெரும் போகத்தில் யூரியா உரத்தை வழங்குவதற்கான இணையவழி பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, சோளப் பயிர்செய்கையாளர்கள் https://www.agrarian.lk/ என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்படும் விவசாயிகளுக்கு 50 கிலோகிராம் நிறைகொண்ட யூரியா மூடை ஒன்று, 10,000 ரூபாவுக்கு வழங்கப்படவுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் […]
பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும்

அரசாங்கத்தினால் அத்தியாவசிய உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படாவிட்டால் சில பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது. தற்போது அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சந்தையில் ஏனைய பொருட்களுக்கான விலைகளை வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் அடிக்கடி அதிகரிப்பதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. பொதி செய்யப்பட்ட உற்பத்தி சார்ந்த பொருட்களின் விலைகள் அண்மைய காலமாக பலத் தடவைகள் அதிகரிக்கப்பட்டன. அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை […]
இலங்கை மின்சாரசபை இவ்வருட இறுதியில் 550 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்ளும்

இலங்கை மின்சாரசபை இவ்வாண்டின் இறுதியில் 550 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்ளும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாண்டுக்கான வரி வருமானம் ஒரு பில்லியன் ரூபாவாகவே காணப்படும். வருமானம் ஒரு பில்லியனாக இருக்கும் அதே வேளை , மின்சாரசபை மாத்திரம் 550 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொள்கிறது எனில் எவ்வாறு நாட்டை முன்னேற்றுவது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசீம் கேள்வியெழுப்பினார். நல்லாட்சியின் போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு , அந்த வழக்குகளிலிருந்து விடுதலை […]
10 மணி நேர மின் துண்டிப்புக்கு முகம்கொடுக்க நேரிடும்

செப்டம்பர் மாதம் இறுதியில் இருந்து இரண்டரை மில்லியன் தொன் நிலக்கரி கொண்டுவர முறையாக நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் 10 மணி நேர மின் துண்டிப்புக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பொரலஸ்கமுவ 43 ஆவது படையணி காரியாலலயத்தல் புதக்கிழமை (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையல், மின்சாரசபையினால் தற்போது மேற்கொண்டுவரும் மின் துண்டிப்பு நேரம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் […]
முச்சக்கரவண்டி பயணக் கட்டணம் மீண்டும் அதிகரிப்பு

முச்சக்கர வண்டிகளுக்கான பயண கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்காக 120 ரூபா அறவிடப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். இரண்டாவது கிலோமீற்றருக்காக 100 ரூபா அறவிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
இரு வாரங்களில் 17,000 சுற்றுலா பயணிகள் வருகை

17,000 க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடந்த இரண்டு வாரங்களில் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அதிகார சபையின் பணிப்பாளர் தம்மிக விஜேசிங்க கருத்து தெரிவிக்கையில், இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 17,000 க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள். வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு பிரிட்டன், இந்தியா, கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள். நாளந்தம் 1,600 க்கும் […]