இன்று முதல் 50 கிலோகிராம் சீமெந்து பையின் விலை குறைப்பு.

மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் சீமெந்து பையின் விலை 50 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து தொழிற்துறை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன் பிரகாரம், 50 கிலோகிராம் சீமெந்து பொதியின் புதிய அதி உயர் சில்லறை விலை 2400 ரூபாயாக அமைந்திருக்கும். இந்த விலைக் குறைப்புடன் நிர்மாணத் தொழிற்துறை ஊக்கம் பெறும் என தாம் எதிர்பார்ப்பதாக சீமெந்து தொழிற்துறை நிறுவனங்கள் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
தோட்ட மக்களின் பிரச்சினைகளை நான் ஒருபோதும் மறக்கவில்லை – ஜனாதிபதி ரணில்

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தாம் ஒருபோதும் மறக்கவில்லை எனவும், ஜனாதிபதி என்ற வகையில் எதிர்காலத்தில் அவர்களின் உரிமைகளை தாம் உறுதிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். கொட்டகலை பொது மைதானத்தில் இன்று (01) இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, லயன் அறைகள் சட்டபூர்வமான கிராமங்களாக மாற்றப்பட்டு அவற்றின் வசதிகள் மேம்படுத்தப்படும் என மேலும் குறிப்பிட்டார். அதற்கான […]
நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும்; ரணில்

தோட்டத் தொழிலாளர் ஒருவரின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (01) கொட்டகலை பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அரச தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரச தலைவர் வேட்பாளர் விஜயதாச!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரச தலைவர் வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க தலைவர் டி.பி. இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, “விஜயதாச ராஜபக்ஷவுக்கு கட்சியின் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு உள்ளது. நான் இம்முறை சத்தியப்பிரமாணம் செய்யும் போது மீண்டும் போட்டியிட […]
எரிக் சொல்ஹெய்ம் யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்பியுடன் சந்திப்பு!

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்த எரிக் சொல்ஹெய்ம் சிறீதரன் எம்பியை சந்தித்து சமகால அரசியல் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினார்
வடக்கு ஆளுநரைச் சந்தித்த எரிக்சொல்ஹெய்ம்!

அரசதலைவர் ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே அயலுறவுத்துறை அமைச்சருமான எரிக்சொல்ஹெய்ம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை(30) மாலை சந்திப்புக் கலந்துரையாடல் ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை, மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றம், எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள், சுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
உலகத் தொழிலாளர்கள் தினம் இன்று !

பெரியசாமிப்பிள்ளை செல்வராஜ் உலகத் தொழிலாளர்கள் தினமானது ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது. நெற்றி வியர்வையினை நிலத்தில் சிந்தி, உழைப்பையே தமது மூலதனமாகக் கொண்டு , தாம் வாழும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கின்ற தொழிலாளர்களின் உன்னத தன்மையினை உலகிற்கு அறிமுகப்படுத்திய இதே தினத்தில் தான் அவர்களது அடிமைச் சங்கிலி உடைத்தெறியப்பட்டது. உழைப்பாளர்களைக் கௌரவிக்கும் முகமாக கொண்டாடப்படும் இந்த நாள் உலகிலுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உரிய முக்கியமான நாளாகும். உழைப்பாளர்களின் ஒற்றுமையையும், மன உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்திய […]