முள்ளிவாய்க்காலில் மிகவும் உண்ர்வுப்பூர்வமாக நடந்த தமிழின அழிப்பு நினைவேந்தல்.

தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் இடம்பெற்றிருந்தது. 2009ஆம் ஆண்டு யுத்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி நினைவு கூர்ந்து உணர்வெழுச்சியுடன் உறவுகள் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமாகும். அந்தவகையில் இன்றையதினம் முள்ளிவாய்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் யுத்தத்தின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. காலை 10.15 மணிக்கு தவத்திரு […]

வீடும், சைக்கிளும் சங்கு கூட்டணி தனித்தனியே சந்தித்தது

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான சந்திப்புகள் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் கந்தரோடையில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டணி இணைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இல்லத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இலங்கை தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் சங்கிலியன் வீதி […]

நடிகர் சூரி வேதனை

‘மாமன்’ திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக மண் சோறு உண்ட மதுரை ரசிகர்கள் குறித்து நடிகர் சூரி கவலை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, ‘கருடன்,கொட்டுக்காளி’ , ‘விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். மூன்று திரைப் […]

காதல் ஜோடி பரிதாப பலி!

வெசாக் பண்டிகையை பார்வையிடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற காதலர்கள், தனியார் பேருந்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அலஸ்வத்தை, கிரிமதிமுல்ல, தெலிஜ்ஜவிலவைச் சேர்ந்த விக்கிரமசிங்க கமச்சிகே மிலன் சமீர (30) என்ற இளைஞனும், பொல்ஹேன காசிவத்தபுரத்தைச் சேர்ந்த எதிரிசிங்க எமெல்ஷி ஹவிஸ்கா டயஸ் (23) என்ற யுவதியும் மாத்தறையில் இடம்பெற்ற சம்பவத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 13 ஆம் திகதி மாலை 6.55 மணிக்கு நடந்த கார் விபத்தில் மிலனுடன் மிலனின் காதலியும் இறந்தார். வெசாக் ஊர்வலத்தைப் பார்த்து, கோயில்களுக்குச் […]

இலங்கை, பிரான்ஸில் தொடர் கொலைகள்: ஆவா குழு தலைவனை நாடு கடத்த கனடா நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் ஆவா ரௌடிக்கும்பலை உருவாக்கியவர்களில் ஒருவனான பிரபல ரௌடி நல்லலிங்கம் பிரசன்னாவை, குற்றவழக்கில் பிரான்ஸூக்கு நாடு கடத்த கனடாவின் ஒன்றாரியோ நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இலங்கையில் வாள்வெட்டு குற்றங்களில் ஈடுபட்ட ரௌடி பிரசன்னா, பின்னர் இலங்கையை விட்டு தப்பியோடி பிரான்ஸில் தஞ்சம் புகுந்தார். அங்கு சென்றும் திருந்தி வாழாமல், அங்கும் வாள்வெட்டு குழுவை உருவாக்கி, மற்றொரு கும்பலை சேர்ந்தவர்களை வெட்டிய குற்றத்திலேயே நாடு கடத்தப்படவுள்ளார். பிரான்ஸில் வாள்வெட்டு குற்றத்தில் பொலிசாரால் தேடப்பட்டதும், ரௌடி பிரசன்னா கனடாவுக்கு தப்பிச் […]

தற்போதைய தமிழரசுக்கட்சி என்பது சுயநலவாதிளின் கைகளில்…

பணம் ,சொத்துக்கள் இருந்தால் யார் என்றாலும் , குறிப்பாக சிங்கள கட்சிகள் என்ன ! கருணா , பிள்ளையான் போன்ற குழுவில் இருந்தவர் என்றாலும் பரவாயில்லை கட்சியில் இடம் கிடைக்கும் . தேர்தல்களில் போட்டியிடலாம்…இங்கே பணம்,சொத்துக்கள் , செல்வாக்கு தான் முக்கியம்… உதாரணமாக சாணக்கியன் மஹிந்தா குழுவின் விசுவாசி .. மஹிந்தவின் கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்று வந்தவர் .. பணம் சொத்துக்கள் இருக்கிறது என்பதற்காக கட்சியில் இடம் கொடுத்து தமிழரசுக் கட்சி தலைமையும் கொடுக்க […]

இலங்கை வந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்

பராசக்தி திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடியில் நடைபெற்றது. தொடர்ந்து, மதுரையில் சில நாள்கள் படப்பிடிப்பை நடத்தினர். பின், முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்ததாக சுதா கொங்காரா தெரிவித்திருந்தார். இந்நிலையில், பராசக்தியின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது. இதற்காக, சிவகார்த்திக்கேயன் மற்றும் இயக்குனர் சுதா […]