க.பொ.த உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகின!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளியாகியிருந்த நிலையில், நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, பௌதீக விஞ்ஞான (கணிதம்) பிரிவில் கொழும்பு ஆனந்தா கல்லூரியைச் சேர்ந்த சிரத் நிரோதா முதலிடம் பிடித்துள்ளார். பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் கினிகத்தேன மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஷெஹானி நவோத்யா நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுஇ மேலும், காலி சங்கமித்த பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த உபனி லெனோரா, விஞ்ஞான பாடத்தில் சிறந்த பெறுபேறுகளுடன் […]

விண்வெளி உபகரணங்களை ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடுகளை விதிக்கும் சீனா

விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்தநிலையில் விமானம், விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு பாகங்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடை போன்றவற்றிற்காக இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. அதேபோல் தைவானுக்கு ஆயுதங்களை […]

இந்தியாவில் வெப்பநிலையால் 15 பேர் உயிரிழப்பு!

வட மற்றும் மத்திய இந்தியாவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வெப்பம் தொடர்பான நோய்களால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை நேற்று ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பத்து இறப்புகள் பதிவாகியுள்ளதுடன் பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்கள் மற்றும் தலைநகர் டெல்லியில் இருந்து வெப்ப தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்நாட்களில் இந்தியாவில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவதுடன் ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், வெப்பநிலை […]

யாழில் போதைப் பொருளுக்கு எதிராக பேரணி.

போதைப் பொருளுக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணியொன்று “போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம். வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம் ” எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நல்லூர் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் இப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நல்லை ஆதீனத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியானது அங்கிருந்து நல்லூர் பிரதேச செயலகம் வரை சென்று நிறைவடைந்த்து. இதன் போது மகிழ்ச்சியான குடும்பத்திற்கு புகைத்தலே […]

அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவைத் தாக்க உக்ரேனுக்கு அனுமதி!

அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்ய இலக்குகளைத் தாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன், உக்ரேனுக்கு அனுமதி அளித்துள்ளார். இதுவரை காலமும் உக்ரேன் தனது எல்லைகளுக்கு அப்பால் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்க மறுத்த பைடன், தனது கொள்கையை மாற்றியிருப்பது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே கடந்த 3 வருடங்களுக்கு மேலாகப் போர் இடம்பெற்று வருகின்றது. இப்போரினால் இரு தரப்பிலும் பெருமளவில் உயிர் சேதமும் பெருட்சேதமும் ஏற்பட்டுள்ளன. இப்போரில் உக்ரேனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துவந்த போதிலும் […]

பிரான்ஸ் அழகுராணிப் போட்டியில் யாழ், புங்குடுதீவு யுவதி!

யாழ்ப்பாணம் தீவு பகுதியை சேர்ந்த புலம்பெயர் தமி யுவதியான கிளாரா பத்மஸ்ரீ ‘மிஸ் பாரிஸ் 2024’க்காக போட்டி இடுகிறார். கிளாரா பத்மஸ்ரீ யாழ்ப்பாணம் புங்குடுதீவை பூர்விகமாக கொண்டவராவார். ‘மிஸ் பாரிஸ் 2024’ போட்டியில் , இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ள 10 பேரில் கிளாரா பத்மஸ்ரீ ஒருவராக உள்ளார். இந்நிலையில் மிஸ் பாரிஸ் 2024 போட்டியில் வெற்றிவாகை சூடவேண்டும் என கிளாராவுக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். அவர் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. […]

யாழில் சண்டித்தனம் காட்டிய பொலிஸுக்கு வக்காளத்து வாங்கிய அதிகாரி!

தொல்புரம் மத்தியில், வாளுடன் பிறரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட பொலிஸ் அலுவலர், வாள்வெட்டுக்காக வந்தவர்களிடம் வாளைப்பறித்து அவர்களை விரட்டினார் என்று காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தின்போது, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் அதிகாரியொருவர் வாளால் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. ‘பொலிஸ் அலுவலர் ஒருவரே இவ்வாறு செயற்பட்டால், பொதுமக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?’ என்று இதன்போது […]