இலங்கைக்கு உதவ இந்திய – ஜப்பானிய தலைவர்கள் இணக்கம்

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியை தீர்க்க உதவுவதற்கு இந்திய மற்றும் ஜப்பானிய தலைவர்கள் இணங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோருக்கு இடையே குவாட் உச்சி மாநாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்விடயம் தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் […]

சிறுபோகத்தில் 50 சதவீதமளவில் அறுவடை குறைவடைய வாய்ப்பு

சிறுபோகத்தில், 50 சதவீதமளவில், அறுவடை குறைவடையக்கூடும் என பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார். 450,000 ஹெக்டேயர் அளவிலான நிலத்தில் நெற்செய்கை முன்னெடுக்கப்படும். சிறுபோக செய்கை குறைவடைந்துள்ள சூழ்நிலையில், 325 ஹெக்டேயர் பரப்பிலான விவசாய நிலத்தில் மாத்திரம் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரசாயன உரம் கிடைப்பது தொடர்பில், விவசாயிகள் மத்தியில் உள்ள நிச்சயமற்ற தன்மையே பயிர்ச்செய்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமைக்கு பிரதான காரணமாகும். இதன் காரணமாக, சிறுபோகத்தில் 50 சதவீதம் அளவில் […]

உள்ளூர் உணவு உற்பத்தியை கொண்டு சந்தைப்படுத்தல் வாய்ப்பு

திருகோணமலை – தம்பலகாமம் கிராம சேவகர் பகுதியில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை விழிப்புணர்வூட்டும் செயலமர்வு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியின்போது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் உணவு உற்பத்தி தொடர்பிலான மேம்படுத்தல்களுக்கு உறுதுணையாக செயற்படுவது தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் உணவு உற்பத்தியை கொண்டு சந்தைப்படுத்தல் வாய்ப்பு வசதிகளை பெற்றுக் கொண்டு சுயதொழிலை முன்னேற்றம் செய்வது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 […]

இலங்கை துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் உயர்வு

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பெரும்பாலானோர் தற்போது, தங்களது போக்குவரத்துக்காக, துவிச்சக்கர வண்டியைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், துவிச்சக்கர வண்டி ஒன்றின் விலை 40,000 ரூபாவை அண்மித்துள்ளதுடன், அதற்கான கேள்வியும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போதேனும் துவிச்சக்கர வண்டி செலுத்துவதை ஊக்குவிக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என மவுண்டன் துவிச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் அமல் சூரியகே தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி மற்றும் துவிச்சக்கர வண்டியின் விலை அதிகரிப்பு என்பன காரணமாக, வீடுகளில் இருந்த பழைய […]

சட்டவிரோதமாக பெற்றோல் விற்பனை செய்த நபர் கைது!

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக பெற்றோலை சேமித்து வைத்து, விற்பனை செய்த சந்தேகநபர் காவல்துறை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு காவல்துறை விசேட அதிரடி படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய புதுக்குடியிருப்பு- வசந்தபுரம் பகுதியில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வர்த்தக நிலையமொன்றில் சட்ட விரோதமாக பெற்றோலை மறைத்து வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரிடம் இருந்து 226 லீற்றர் பெற்றோல் […]

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உக்கிரமடையும் !

சிறு போகத்திற்கு தேவையான நடவடிக்கைகள் சில மாவட்டங்களில் தாமதமாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2 வாரங்களுக்குள் செய்கை நடவடிக்கைகள் நிறைவுபெறாவிடின், நாட்டில் உணவுத் தட்டுப்பாடு உக்கிரமடையும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். தற்போது நெற்செய்கையை செய்ய முடியாது போனால் மாற்றுப் பயிர்களை பயிரிடுமாறு அவர் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் […]

சதொசவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள சதொச கிளைகளில் இன்று (26) முதல் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப் பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். ஹட்டன் சதொச கிளையில் கடந்த வாரம் 175 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பொன்னி சம்பா 200 ரூபாவுக்கும், 145 ரூபாவுக்கு விற்கப்பட்ட சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ 175 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சீனி 177 ரூபாவாகவும், 489 ரூபாவாக விற்கப்பட்ட இறக்குமதி […]