தமிழகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு

தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் இன்று ஆராயப்பட்டதாக தெரிவித்தார். ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் […]
நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடும்

தவிர்க்க முடியாத வகையில் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என பேராதனை பல்கலைகழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்தார். சிறு போகம் தற்போது பாதியளவு நிறைவடைந்து விட்டது. போதுமான அளவு இரசாயன உரம் இதுவரையில் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இந்த முறை 315,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் சிறுபோகம் இடம்பெறுகிறது. வழமையாக சுமார் 4 லட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் சிறுபோகம் இடம்பெறும். சிறுபோகத்திற்காக 80 ஆயிரம் மெட்ரிக் டன் […]
லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

3,500 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பல் நாளைய தினம் இலங்கையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, இன்றைய தினம் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களைக் கோரியுள்ளது. ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி […]
மத்திய வங்கிக்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும்

மத்திய வங்கியின் கடமைகள் சுதந்திரமாக நிறைவேற்றப்படுவதற்கு அரசாங்கம் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதிக்குழுவின் உறுப்பினர் சஞ்ஜீவ ஜயவர்தன உள்ளிட்டோருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இன்று (28) முற்பகல் இடம்பெற்றது. நிதி நெருக்கடியை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தவும் சிறந்த நிலைக்கு கொண்டுவரவும் மத்திய வங்கி ஆளுநர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஜனாதிபதி […]
ஒரு போத்தல் பெற்றோலை 800 ரூபாவுக்கு விற்ற பெண் கைது

அளுத்கம கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் மனைவி பேருவளை கலாவில கந்தேனிவாச என்ற இடத்தில் சட்டவிரோதமான முறையில் பெற்றோலை அதிக விலைக்கு விற்பனை செய்யும் போது பெற்றோல் கையிருப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். பேருவளை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்திய விசாரணையில், கணவர் பணி முடிந்து வீடு திரும்பும் போது கொண்டு வரும் பெற்றோலை தான் விற்பனை செய்வதாகக் கூறியுள்ளார். பெற்றோல் போத்தல் ஒன்றை […]
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்படுகிறது?!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் தொடராக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாப் பரவலின் தொடராக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. கொரோனா நெருக்கடி நிலை தீர்ந்து பிசிஆர் பரிசோதனைகள் கூட தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும் இன்றுவரையில் குறித்த விமான நிலையத்தினை மீளத் திறப்பதற்கான ஏற்பாடுகள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை. இருந்தபோதிலும் பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் […]
ஜுன் முதலாம் திகதி திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியன்று ஏலவிற்பனையினூடாக 83,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 40,000 மில்லியன் உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்வடையும் 23,000 மில்லியன் உண்டியல்களும், 364 நாட்களில் முதிர்வடையும் 20,000 மில்லியன் உண்டியல்களும் ஏலத்திற்கு விடப்பப்படவுள்ளன. அரசாங்கப் பிணையங்களில் உள்ள முதனிலை வணிகர்களிடம் இருந்து விலைக்குறிப்பீடுகள் கோரப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கியால் வழங்கப்பட்ட இலத்திரனியல் விலைக்குறிப்பீட்டு வசதியூடாக மட்டுமே விலைக்குறிப்பீடுகள் […]