அதிக நட்டத்தை ஏற்படுத்தும் நிறுவனங்களில் ஸ்ரீ லங்கன் வாநூர்தி

இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான அதிக நட்டத்தை ஏற்படுத்தும் நான்கு நிறுவனங்களில் ஸ்ரீ லங்கன் வாநூர்தி சேவையும் ஒன்றாகும் என சுதந்திரமாக மதிப்பிடும் அமைப்பான அட்வகேற்றா (Advocata) தெரிவித்துள்ளது. இதன் செயல்பாடு காரணமாக பொது நிதி வீணாக விரையமாவதாக அந்த அமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தினை தனியார் மயப்படுத்துவதன் மூலம் மேலும் ஏற்படக்கூடிய நட்டத்தினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும் என அந்த அமைப்பினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, கடந்த 2021 […]

டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 74 சதமாகவும், இதேவேளை, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 77 சதமாகவும் பதிவாகியுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே […]

கொழும்பு தேயிலை வர்த்தக சங்கத்தின் கோரிக்கை

கொள்கை வகுப்பாளர்கள் நிபுணர்களின் கருத்திற்கு மதிப்பளித்து அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும் என கொழும்பு தேயிலை வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது. தேயிலை வர்த்தக சங்கத்தின் தொழில் பங்குதாரர்களாக செயல்படும் தேயிலை செடி வளர்ப்போர், உற்பத்தியாளர்கள், பெருந்தோட்ட நிறுவனங்கள், தரகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் இலங்கை தற்போது எதிர்கொள்ளும் நிலைமையினை கவலையுடன் நோக்குகின்றனர். சங்கத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது இடம்பெற்ற அசாதாரண நடவடிக்கைகள் மக்கள் மற்றும் வர்த்தக சமூகத்தை பெரிதும் […]

சூரிய சக்தியின் ஊடாக மின்சாரம் வழங்க புதிய திட்டம்

வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சூரிய சக்தியின் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்காக நுகர்வோருக்கு அனுமதியை வழங்குவதற்கும் அவசியமான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு வீட்டினதும் தொழிற்சாலைகளினதும் கூரைகள் மீது இலகுவாக பொறுத்தக் கூடிய சூரிய சக்தி தகடுகள் உள்ளன. இதனூடாக பகல் வேளையில் மின்சாரத்தை […]

யாழினி எரிபொருளை சேமித்து வைத்திருந்த மூவர் கைது

சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து வைத்திருந்த மூவர் பொல்கஹாவல மற்றும் யாழ்ப்பாணம் – சுன்னாகம் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 500 லீற்றர் டீசல், 306 லீற்றர் பெற்றோல் மற்றும் ஆயிரத்து 670 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன. மயிலங்காடு, சுன்னாகம் மற்றும் யட்டிகல் ஒலுவ பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர். இதேவேளை, சட்டவிரோதமாக எரிபொருள் சேமிப்பில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தொடர்ந்தும் சுற்றி வளைப்புகளை முன்னெடுத்துள்ளனர். ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 […]

கடவுச்சீட்டினை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாளாந்தம் கடவு சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு 2 ஆயிரத்து 500 பேர் வரை முன்பதிவு செய்வதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இதுவரையான காலங்களில் வழங்கப்பட்ட கடவுசீட்டுக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் தற்பொழுதே அதிகமான கடவுசீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அதிக எண்ணிக்கையிலானோர் கடவு சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கு வருகின்றமையினால் பத்தரமுல்லையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது . ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 […]

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலகளவில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவு தொடர்ந்து வருவதால், தங்கத்தின் விலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கமைய, வார இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,853 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதென உலக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இரண்டாவது வாரமாக தங்கம் விலை உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே […]