அனைத்து வாகன உரிமையாளர்களையும் பதிவு செய்வதற்கான புதிய நடைமுறை

அனைத்து வாகன உரிமையாளர்களையும் பதிவு செய்வதற்கான புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. எரிபொருள் விநியோக முறையின் ஊடாக பதிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக உரிய பதிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com 🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com ⏰ […]
யூரியா உரத்தை பெற்றுக்கொள்ள உதவி வழங்க உலக வங்கி இணக்கம்

2022ஆம் ஆண்டுக்கான பெரும்போகத்தின் நெற் பயிர்செய்கைக்கு யூரியா உரத்தை பெற்றுக்கொள்ள உதவி வழங்குவதற்கு உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இரசாயன உரம் பெற்றுக்கொள்வது தொடர்பில் உலக வங்கி அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த இணக்கப்பாடு வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்போகத்திற்கு தேவையான யூரியாவை உலக வங்கியின் அணுசரனையின் கீழ் வழங்குவதாக அவர்கள் இதன்போது, உறுதியளித்தாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டார். இதன்மூலம் எதிர்வரும் பெரும்போகத்தில் வெற்றிகரமாக விளைச்சலை பெற […]
இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் தொடர்பான விபரம் வர்த்தக அமைச்சிடம் கையளிப்பு

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவற்றை இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் தொடர்பான விபரம் இன்று வர்த்தக அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் இந்த விபரம் வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக ஒவ்வொரு மாதமும் 100 மில்லியன் டொலர் வங்கி ஊடாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. இதற்காக இறக்குமதி செய்யப்படும் பொருள் மற்றும் இறக்குமதி செய்பவர்கள் தொடர்பான ஆவணத்தை வழங்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, அது தொடர்பான விபரம் வர்த்தக அமைச்சிடம் […]
தொலைபேசி – இணையத்தள சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன

வரி அதிகரிப்பு காரணமாக, தொலைபேசி மற்றும் இணையத்தள சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. எவ்வாறாயினும், அந்தக் கட்டண அதிகரிப்புக்கான விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை. உடன் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரியான வற் மற்றும் தொலைத்தொடர்புகள் தீர்வை என்பனவற்றை அதிகரிக்கப்பதற்கு நேற்று யோசனை முன்வைக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 8 சதவீதம் அறவிடப்பட்ட பெறுமதி சேர் வரியான வற் 12 சதவீதமாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. வற் வரி திருத்தத்தை நாடாளுமன்ற அனுமதியின் கீழ் வர்த்தமானியில் பிரசுரித்து […]
உரத்தை வழங்க இந்திய பிரதமர் இணக்கம்

அடுத்த சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை உடனடியாக பெற்றுக்கொடுப்பதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய கடன் எல்லைத் திட்டத்திலான இந்த உரத் தொகுதி நாட்டிற்கு கிடைக்கப்பெறும் தினத்திலிருந்து 20 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. உமா ஓயா மற்றும் மொரகாகந்தை திட்டங்களை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்து பெரும்போகத்தின் நன்மைகளை பெறுவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நிதியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள […]
369 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி

மார்ச் மாதம் 9ஆம் திகதி இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை, புதிய வரி உள்ளிட்ட சட்டங்களுக்கு அமைய இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. 🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 12 சதம் விற்பனை பெறுமதி 365 ரூபா 09 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 445 ரூபா 60 சதம். விற்பனை பெறுமதி 461 ரூபா 11 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 392 ரூபா 25 சதம் சுவிஸ் பிராங் […]