எரிவாயு தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளது

லாஃப்ஸ் சமையல் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று இன்று (2) நாட்டை வந்தடையவுள்ளது. கடந்த சித்திரை புத்தாண்டுக்கு முன்னரான காலப்பகுதி முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில், நாணய கடிதம் விடுவிக்கப்பட்டு மீண்டும் எரிவாயு கொள்கலன் விநியோகத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது. இதற்கமைய, இன்றைய தினம் நாட்டை வந்தடையும் கப்பலில் இருந்து எரிவாயு தரையிறக்கப்பட்டதும், உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினம் சமையல் […]

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு ரஷ்யா அதிருப்தி

ரஷ்யாவின் ‘எரோஃப்ளோட்’ விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு ரஷ்யா அதிருப்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித்தா அபேவிக்ரம லியனகே அந்த நாட்டின் வெளிவிகார அமைச்சுக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, ரஷ்ய ‘எரோஃப்ளோட்’ விமானத்தின் சகல பயணிகளும் இன்றும், நாளையும் அந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என இலங்கையில் உள்ள ‘எரோஃப்ளோட்’ நிறுவனத்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது. மொஸ்கோவ் நோக்கிப் பயணிக்கவுள்ள விமானங்களில் குறித்த பயணிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குறித்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் […]

கடந்த வருடம் 382,506 , இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 282,506 வெளிநாட்டு கடவுச்சீட்டு

இந்த வருடத்தின் முதல் ஐந்து மாத காலப்பகுதியில் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 382,506 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டன. எனினும், இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 282,506 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலை வாய்ப்பை நாட முன்வந்துள்ளமையே இதற்கான காரணம் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பியும் பண்டார தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டை […]

இன்று நள்ளிரவு முதல் தொலைத்தொடர்பு வரி அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிக்கப்படவுள்ளது. அதற்கமைய குறித்த வரியானது, 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

இந்தியாவில் 16 இலட்சத்திற்கும் அதிகமான வட்ஸ்அப் பயனாளர்களின் கணக்குகள் தடை

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 16 இலட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களின் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக வட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. வட்ஸ்அப்பில் தீங்கு விளைவிக்கும் செயற்பாட்டைத் தடுப்பதற்காக, 16 இலட்சத்து 66 ஆயிரம் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக அந்த நிறுவனத்தின் மாதாந்த அறிக்கையை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றம் நடைபெறுவதை தடுப்பதில் கவனம் செலுத்துகிறோம், ஏனெனில், தீங்கு ஏற்பட்ட பின்னர் அதைக் கண்டறிவதை விட, தீங்கு விளைவிக்கும் செயலை முன்னரே தடுப்பது மிகவும் சிறந்ததாகும் என […]

தனிநபர் ஒருவருக்கு 50 மில்லியன் டொலர்களுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்ய அனுமதி

இந்திய கடன் வசதியின் மூலம், தனிநபர் ஒருவருக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. தங்களுக்காக ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் டொலரில் தனிப்பட்ட நபர் ஒருவருக்கு, 10 சதவீதத்தை வழங்கியமையானது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாகும் எனத் தாம் கருதுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் கே.இளமைநாதன் தெரிவித்துள்ளார். தங்களது வியாபார சங்கத்தில் சுமார் 400 வர்த்தகர்கள் இதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில், தங்களது […]

குறுகிய காலத்தில் 120,000 பேர் வெளிநாடு சென்றுள்ளனர் !

இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 100% அதிகரிப்பாகும் என அதன் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார். கடந்த வருடம் 122,000 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக வெளியேறியுள்ளனர். இவ்வருடம் 300,000 பேரை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப பணியகம் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பல நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் மங்கள […]