உரம் கிடைக்காவிடின் உணவு உற்பத்தியை முன்னெடுப்பதில் தடை ஏற்படும்

ஆண்டிறுதியில் உரம் கிடைக்கப்பெறாவிட்டால் உணவு உற்பத்தியை முன்னெடுப்பதில் தடை ஏற்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை ரூபா பற்றாக்குறை காரணமாக இலங்கையின் முழு அரசியல் முறைமைகள் பாதிப்படைந்துள்ளன. இந்த பற்றாக்குறைகள் காரணமாக சாதாரண மக்கள் மற்றுமல்லாது நாடாளுமன்றம் உட்பட அரசாங்கம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் காலங்களில் பாரிய உணவுப்பற்றாக்குறையினை எதிர்நோக்க வேண்டிய நிலை […]
“மரக்கறி விதைபொருள் வழங்கும் செயற்றிட்டம்”

விவசாய திணைக்களத்துடன் இணைந்து மனித வள வேலைவாய்ப்பு திணைக்களம் நடாத்தும் “மரக்கறி விதைபொருள் வழங்கும் செயற்றிட்டம்” மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (03) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. இந் நிகழ்ச்சித்திட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், விவசாயப் பணிப்பாளர் மற்றும் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்களத் தலைவர்கள், விவசாயிகள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். 🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு […]
விவசாயிகளுக்கு இம்மாத இறுதிக்குள் இந்திய உரம்

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு இம்மாத இறுதிக்குள் உரம் கிடைக்கும் என்பதை விவசாய அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் உறுதியளிக்கப்பட்டதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் எஸ். யோகவேள் தெரிவித்தார். அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர்களுக்கும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையிலான சந்திப்பு ,அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசியத் தலைவர் எச். சமரகோன் தலைமையில் வியாழக்கிழமை பிற்பகல் 02.06.2022 விவசாய அமைச்சில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் சமகாலத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் […]
யாழ் மாவட்டத்தில் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் மண்ணெண்ணெய்

யாழ் மாவட்டத்தில் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கண்காணிப்பு பொறிமுறை ஊடாக மண்ணெண்ணெய் விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட விவசாய குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (03) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கிகள் விவசாயிகளுக்கு கடனுதவிகளை வழங்குதல், பயிர்செய்கைகளுக்கான கால அட்டவணைகளை மாற்றுதல், உணவுப்பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் உணவு வீண்விரயத்தை குறைத்து வீட்டுத்தோட்ட உற்பத்திகளை அதிகரித்தல், விதைகளின் தேவைப்பாடு, விதை நெல் தேவைப்பாடு மற்றும் […]
அனைத்துப் பயன்படுத்தப்படாத நிலங்களிலும் உணவுப் பயிர்களைப் பயிரிட ஆரம்பியுங்கள். ஜனாதிபதி

பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத நிலங்களைக் கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 9,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான பயிரிடப்படாத நிலங்கள் உள்ளன. 23 கம்பனிகளுக்குச் சொந்தமான அந்த தோட்டங்களில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற பயிர்களை இனங்கண்டு, அவற்றை பயிரிடுபவர்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். தேயிலை ஏலம் டொலர்களில்… பெருந்தோட்டத் துறையின் தேவைகளுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமை… அனைத்துப் […]
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 365 ரூபா 28 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 445 ரூபா 19 சதம். விற்பனை பெறுமதி 460 ரூபா 70 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 9 சதம் விற்பனை பெறுமதி 393 ரூபா 95 சதம் சுவிஸ் பிராங் […]
நிலையான வெளிநாட்டு நேரடி வைப்பு எதிர்பார்ப்பபுடன் 5 ஆண்டுக்கான மூலோபாய திட்டம்

இலங்கை முதலீட்டுச் சபை நிலையான வெளிநாட்டு நேரடி வைப்பு எதிர்பார்ப்புடன் ஐந்தாண்டுக்கான மூலோபாய திட்டத்தை முன்வைத்துள்ளது. முதலீட்டு வசதிக்கான அபிவிருத்தி மற்றும் ஆசிய, பசுபிக் பொருளாதார நன்மைகள் எனும் தொனிப்பொருளின் கீழ் தாய்லாந்தில் அண்மையில் மாநாடு ஒன்று இடம்பெற்றது. இதன்போது ‘அந்த முதலீட்டு வசதி அளவுத்திட்டங்கள் மிகவும் முக்கியமானவை’ என்ற தொனிப்பொருளின் கீழ் உரையாற்றிய போதே இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா வீரகோன் இந்த திட்டத்தை முன்வைத்துள்ளார். இந்த திட்டமானது குறிப்பிடத்தக்க உயர் மட்டங்களை […]