தவிக்கும் இலங்கைக்கு உருளைக்கிழங்கு வழங்கும் பங்களாதேஷ்

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவது குறித்து பங்களாதேஷ் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இந்நாட்டு மக்களின் பாவனைக்காக ஒரு தொகை உருளைக்கிழங்கை வழங்க பங்களாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சம்மேளனத்தின் (சார்க்) செயலாளர் நாயகம் எசல ருவன் வீரகோனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இந்த உறுதியை வழங்கியுள்ளார். பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் சார்க் பொதுச் செயலாளர் […]
ஓமானிலிருந்து இலங்கைக்கு நேரடியாக யூரியா

ஓமானில் இருந்து நேரடியாக இலங்கைக்கு யூரியா உரத்தை அனுப்பி வைப்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கைக்கு 65, 000 மெட்ரிக் டன் யூரியாவினை நன்கொடையாக வழங்குவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த தொகுதி ஓமானில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு நேரடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மற்றும் இந்திய […]
நான் பதவி விலகமாட்டேன்

தாம் மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். கொழும்பில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தோல்வியடைந்த ஜனாதிபதியாக தாம் பதவி விலக போவதில்லை மக்கள் தமக்கு 5 வருடகால ஆணை வழங்கியுள்ளனர். எஞ்சிய காலத்திலும் தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகிப்பேன். நாட்டை சீரழித்துள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அவதானம் செலுத்தியுள்ளேன். ஏற்கனவே வழங்கிய வெற்றிகரமான சேவையை மீள ஸ்தாபிக்க விரும்புகிறேன் . 6 மாதங்களுக்கு […]
ரஷ்ய விமானம்! இலங்கை நீதிமன்றம் தடையை நீக்கியது

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் தடை உத்தரவை இடைநிறுத்தி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றுக்கு இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் அண்மையில் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவின் பிரகாரம், ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்குச் செல்லவிருந்த ஏ330 ரக விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது. அயர்லாந்து நிறுவனமான Celestial Aviation Trading Limited நிறுவனம் தாக்கல் […]
குடும்பம் ஒன்றின் நாளாந்த தொகை ரூ.700ஆக அதிகரிப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குடும்பம் ஒன்று போசாக்கான உணவினை பெற்றுக்கொள்ள, நாளாந்தம் தேவைப்படும் தொகையானது, 700 ரூபாவாக அதிகரித்துள்ளதாக வயம்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரேணுக சில்வா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2018 முதல் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலப்பகுதியில் இந்த தொகையானது 450 ரூபாவாக காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கர்ப்பிணித்தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குறைந்த நிறைகொண்ட பிள்ளைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திரிபோஷ வேலைத்திட்டம் தற்போது நடைமுறையில் இல்லை. […]
கிராமப்புறங்களில் நெல் சேகரிப்பதால் பல்வேறு பிரச்சினைகள்

எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையினால் நகர்புற மத்திய தர வர்க்கத்தின் சிலர் கிராமப்புறங்களுக்கு பிரவேசித்து நெல் சேகரிப்பில் ஈடுபடுவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. அநுராதபுர மாவட்ட சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. எதிர்காலத்தில் ஒரு கிலோகிராம் அரிசி 500 ரூபாவாக அதிகரிக்கக்கூடும் என அதன் தலைவர் யூ.கே சேமசிங்க அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார். இதேவேளை, இந்த வருடத்திற்குள் 8 […]
இலங்கையில் ரஷ்ய விமான விவகாரம்

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுத்துவைக்கப்பட்டுள்ள ரஷ்ய எரோஃப்ளொட் விமானம் தொடர்பில் சட்டமா அதிபர் நீதிமன்றில் இன்று மனுவொன்றின் மூலம் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளார். 191 பயணிகள் மற்றும் 32 பணிக்குழாமினருடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த விமானம் கடந்த இரண்டாம் திகதி வந்தடைந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டது. குத்தகை பிரச்சினை காரணமாக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்த பயணிகள் வேறு விமானங்கள் ஊடாக ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த […]