இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 366 ரூபா 23 சாதமாகவும், கொள்முதல் பெறுமதி 356 ரூபா 09 சதமாகவும் பதிவாகியுள்ளது 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் […]

அரிசி விலை, வர்த்தமானியில் திருத்தம் மேற்கொள்ளவில்லை

அரிசியின் விலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் அல்லது இரத்துச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) நிராகரித்துள்ளது. மே 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம், ஒரு கிலோகிராம் நாட்டு அரிசி 220 ரூபாவாகவும், சம்பா ஒரு கிலோகிராம் 230 ரூபாவாகவும், கீரி சம்பா 260 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி விலையை திருத்தவோ அல்லது அதிகரிக்கவோ அதிகாரசபைக்கு […]

சிறியளவிலான நெற்செய்கையாளர்கள் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி

இரண்டு ஹெக்டேயருக்கு குறைவான நிலப்பரப்பை கொண்ட நெற்செய்கையாளர்கள் பெற்றுள்ள கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். விவசாயிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு பிரதமர் குறைநிரப்பு பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் இன்று முற்பகல் முன்வைத்திருந்தார். 695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை இவ்வாறு பிரதமர் முன்வைத்திருந்தார். 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய […]

அடுத்த 3 வாரங்கள் மிகவும் கடினமானவை: எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துக

அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதுதொடர்பில் தொடர்ந்துரைத்த பிரதமர், நாம் அனைவரும் எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தவரை கவனமாக உபயோகப்படுத்த வேண்டிய நேரம் இதுவாகும். பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்த வேண்டும். எனவே, இந்தக் காலக்கட்டத்தில் தேவையில்லாமல் எரிபொருள் மற்றும் எரிவாயுவை பதுக்குவதையும் தவிர்க்குமாறு அனைத்து குடிமக்களையும் கேட்டுக் கொள்கிறேன். வரப்போகும் கடினமான மூன்று வாரங்களுக்குப் […]

கூகுள் நிறுவனத்துக்கு பாரிய தொகை அபராதம் விதித்த நீதிமன்றம்

அவுஸ்திரேலிய நீதிமன்றம், கூகுள் நிறுவனத்துக்கு பாரியளவு தொகை அபராதம் விதித்துள்ளது. யூடியுப் காணொளி ஒன்றின் ஊடாக அவுஸ்திரேலிய அரசியல்வாதியான ஜோனுக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்ததாக தெரிவித்து 515000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் சமஷ்டி நீதிமன்றம் இவ்வாறு கூகுள் நிறுவனத்தின் அபராதம் விதித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பிரதி முதல்வராக கடமையாற்றி வரும் ஜோன் பாரிலாரோவிற்கு எதிராக காணொளி வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் காணொளிகளின் காரணமாக ஜோன், தனது அரசியல் வாழ்க்கையை முடித்துக் கொண்டார் […]

இலங்கையில் இருந்து புறப்பட்டது ரஷ்ய விமானம்

ரஷ்யாவின் ஏரோபுளோட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றிற்கு, நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு ரத்து செய்யப்பட்டதையடுத்து, விமானம் ரஷ்யா புறப்பட்டது. இலங்கை கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபரினால் இன்று (06) தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்து, நீதவான் ஹர்ஷ சேதுங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அயர்லாந்து நாட்டிற்கு சொந்தமான சேலேஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடட் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் விசாரணைகளின் போது, ரஷ்யாவின் ஏரோபுளோட் விமான சேவை நிறுவன […]

வீட்டுத் தோட்ட கிராமங்களை உருவாக்கும் புதிய வேலைத்திட்டம்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டுத் தோட்ட செய்கைகளை மேற்கொள்ளும் கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தட்டுப்பாடு நிலவும் உணவுப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதே குறித்த திட்டத்தின் நோக்கமாகும். தற்போதைய சந்தர்ப்பத்தில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். கிராம உத்தியோகத்தர்கள், விவசாய அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த வேலைத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் […]