நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும்

நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தேவையான அளவு டீசல் மற்றும் பெற்ரோல் நாளை முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவத்துள்ளார். அதற்கமைய, 5,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 3,500 மெட்ரிக் தொன் பெற்ரோல் என்பன விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் […]

அடுத்த இரண்டு மாதங்களில் அரிசி 500 ரூபாய், பருப்பு 1000 ரூபாய்

திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு கிலோ அரிசி 500 ரூபாவையும் ஒரு கிலோ பருப்பு 1000 ரூபாவையும் தாண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். சீமெந்து விலை 4,000 ரூபா, எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதற்கு மேலாக விரைவில் மின் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார். காவியன் 🛒 இணையம் […]

யாழில் அறுவடை செய்யப்பட்ட திராட்சைகளை சந்தைக்கு

யாழ்ப்பாணத்தில் அறுவடை செய்யப்பட்ட திராட்சைகளை சந்தைக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடத்தை விட இந்த முறை திராட்சையின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில், அறுவடை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் திராட்சை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இறக்குமதி செய்யப்படும் திராட்சைக்கு அதிக வரி அறவிடப்படுகின்றது. இவ்வாறான பின்னணியில் உள்நாட்டு திராட்சைக்கான விலையும் வெகுவாக அதிகரித்துள்ளது. 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி […]

மரக்கறிகள், மீன்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

அத்தியாவசிய பொருட்களுக்கு மேலதிகமாக சந்தைகளில் தற்போது, மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. இதன்படி, பேலியகொடை மீன் சந்தை கட்டடத்தொகுதியில் ஒரு கிலோ கிராம் கெலவல்லா மீன் 2,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோகிராம் தலபத் மீன் 1,700 ரூபாவிற்கும், பலயா மீன் ஒரு கிலோ கிராம் 1,000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோகிராம் சாலை மற்றும் லின்னா ஆகிய மீன்களின் மொத்த விற்பனை விலை 800 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 🛒 […]

யாழ். மாவட்டத்திற்கு மண்ணெண்ணெய் விநியோகம்

கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு இன்றும் நாளையும் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசனின் அறிவுறுத்தலின் பிரகாரம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. பயிர்ச்செய்கை நிலங்களின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கு அண்மையில் எரிபொருள் அட்டை வழங்கப்பட்டது. அந்த அட்டையைக் காண்பித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இன்றும் நாளையும் […]

695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை

அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் 695 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை ஒன்று இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் நாளைய தினம் நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். பின்னர் அவரது அறிவிப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்றெவுள்ளது. 🛒 இணையம் […]

விருந்தகங்களில் வெளிநாட்டு நாணய அலகுகளில் கொடுக்கல், வாங்கல்களை செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி இரத்து

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு பெற்ற விருந்தகங்கள், வெளிநாட்டு நாணய அலகுகளில் கொடுக்கல், வாங்கல்களை செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com