முதல் தடவையாக இலங்கையின் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளது

இலங்கையின் மொத்த வெளிநாட்டு நாணய ஒதுக்கம் எப்ரல் மாதத்தில் 1,812 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்து, மே மாதம் முதலாம் திகதி 1,920 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் முதல் தடவையாக இவ்வாறு டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளது. 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் […]

34,000 வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கையை மேற்கொள்ள தீர்மானம்

எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய உணவு தட்டுப்பாட்டிற்கு தீர்வாக மேல்மாகாணத்தில் 34,000 வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இதுதவிர, பயன்படுத்தப்படாத மாகாண சபைக்கு சொந்தமான காணிகள் மற்றும் தரிசு நிலங்களில் விவசாயம் செய்யும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மாகாண ரீதியாக உள்ள விவசாய ஆலோசகர்கள் ஊடாக இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஒரு விவசாய ஆலோசகரின் கீழ் 300 வீட்டுத் தோட்ட […]

சுற்றுலாத்துறை வழங்கப்பட்ட கடன் சலுகைக்காலம் நீடிப்பு

சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்பட்ட கடன் சலுகைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் மனுஷ நாணயக்கார அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, அந்த கடன் சலுகைக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக […]

எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு

இன்று முதல் வழமைப்போல் எரிபொருளை நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று முதல் 5,000 மெட்ரிக் டன் பெற்றோலும், 3,500 மெட்ரிக் டன் டீசலும் சந்தைக்கு விநியோகிக்க தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் எரிபொருள் தாங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. மத்திய வங்கி அதற்கான நிதி ஒதுக்கத்தை மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி இந்திய கடன் திட்டத்தின் கீழ் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று […]

3,900 மெட்ரிக் டன், மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது

3,900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை இன்று வந்தடைந்துள்ளதாக, லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, மிகுதி 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி எரிவாயுவை தரையிறக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய மேலும் 6 நாட்களுக்கு எரிவாயு விநியோகம் இடம்பெறுமென அவர் தெரிவித்துள்ளார். 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என […]

தொடருந்து வருடாந்தம் ஏற்படும் நட்டம் 15 பில்லியன் ரூபா…

தற்போதைய நெருக்கடி நிலையில் தொடருந்து திணைக்களத்திற்கு வருடாந்தம் ஏற்படும் நட்டம் 15 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மாத்திரம் பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் அதற்கு நிகராக தொடருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என தொடருந்து திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். பேருந்து பயணக் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் நான்கில் ஒரு பங்கை விடவும் குறைவான கட்டணமே தொடருந்துக்கு அறவிடப்படுவதாக அவர் தெரிவித்தார். எனினும் பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை அடுத்து […]

IMF பிரதானியிடம் பிரதமர் முன்வைத்துள்ள கோரிக்கை

செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு நிதி கிடைக்கும் வகையில், சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை துரிதப்படுத்துமாறு, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவிடம் கோரியதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம் பிரதிநிதிகளை விரைவில் இலங்கைக்கு அனுப்புமாறும் பிரதமர், கோரியுள்ளார். நேற்று அவருடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே பிரதமர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அந்த பிரதிநிதி குழு நாட்டை வந்தடைந்தவுடன் பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்தை நிறைவு செய்ய முடியும். […]