ரெலோ கூட்டத்தில் பெரும் களேபரம். – லைக்கா நிறுவனத்திடம் பணம் பெற்றது தொடர்பில் செல்வத்திடம் கேள்வி.

இலங்கை தழிழ் அரசு கட்சியுடன் கூட்டணி வைக்கலாமா என, அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தீர்மானித்துள்ளது. அத்துடன், கட்சியில் இருந்து கட்சியின் பிரமுகர் விந்தன் கனகரட்ணத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று வவுனியாவில் கூடிய கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. கடந்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தில், விந்தன் கனகரட்ணம் பகிரங்கமாக முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்க 3 வாரங்கள் அவகாசமளிக்கப்பட்டது. இதேவேளை, விந்தனின் நடவடிக்கைகள் தொடர்பில் கட்சியின் […]

வரிகள் செலுத்தப்படாமையால் துறைமுகத்தில் விடுவிக்கப்படாமல் உள்ள அரிசி!

தேவையான வரிகள் செலுத்தப்பட்டால், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் இருப்பு நான்கு மணித்தியாலங்களுக்குள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படும் என மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நடவடிக்கைகள் இறக்குமதி செயன்முறையை சீர்செய்வதையும், உள்ளூர் சந்தைக்கு அரிசி உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும். இறக்குமதியாளர்கள் பொருந்தக்கூடிய கடமைகளைத் தீர்ப்பதன் மூலம் பொருட்களை விடுவிக்கவேண்டும் எனவும். சுமார் 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் […]

மதுபான அனுமதி குற்றச்சாட்டிற்கு வார இறுதியில் பதில்!

கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த தேர்தல் காலத்தில் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாகவும். மதுபான உரிமம் வழங்கும் முறை குறித்து விரிவாக விளக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அதேவேளை. கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்களின் பட்டியல் பிமல் ரத்நாயக்கவினால் […]

இன்று இலங்கை டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 39 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 97 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபாய் 79 சதம் விற்பனை பெறுமதி 375 ரூபாய் 97 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 54 சதம், விற்பனை பெறுமதி 312 ரூபாய் 31 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் […]

யாழில் இளம் தாயின் உயிரை பறித்தது..

யாழ் அரியாலையப் பகுதியில் ஒவ்வாமை காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்துள்ளார் . தீடிர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்தசம்பவம்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . அரியாலைப் பகுதியில் திருமணம் செய்து 5 மற்றும் 3 வயது பிள்ளைகளின் தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்றுறு செவ்வாய்க்கிழமை மாலை 4-00 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . ஜீவராஜ் ரேவதி வயது 38 என்ற […]

சூப்பர் சிங்கர் ஜூனியர் மேடையில் யாழ் குயில்!

யாழ்ப்பாணம், கொக்குவில்: தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் – 10 இல் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி சிந்துமயூரன் பிரியங்கா கலந்து கொள்ளவுள்ளார். சிறுவயது முதலே இசையில் தனித்திறன் மிக்கவராகத் திகழும் பிரியங்கா, பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் தனது இனிமையான குரலால் பலரையும் கவர்ந்துள்ளார். அவரது இசைத் திறமையை அங்கீகரித்து, விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் – 10 போட்டியில் அவரை தேர்வு செய்துள்ளது. தற்போது போட்டியாளர்கள் […]

தமிழர்கள் சண்டையிலா?:மறுக்கின்றது ரஸ்யா!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரெய்னிற்கு எதிராக போரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல்களை இலங்கைக்கான ரசிய தூதரகம் மறுத்துள்ளது. பிரான்ஸ் பெல்ஜியத்திற்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரெய்னிற்கு எதிராக போரிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என குடும்பங்கள் யாழ்.ஊடக அமையத்தில் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். இதனிடையே போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட இளைஞர்கள் இராணுவ உடையணிந்து பேசுகையில் இரசிய இராணுத்தில் இணைக்கப்பட்டு, உக்ரெய்னுக்கு எதிராக போரிடுவதாக கூறியிருந்தனர். எனினும், இதனை முற்றிலும் மறுத்துள்ள ரசிய தூதுரகம், அவ்வாறான தகவல்கள் […]